இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 28 ஜனவரி 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: யதார்த்தமாகவும், தத்துவமாகவும் பேசி அனைவரது இதயத்திலும் இடம் பிடிப்பீர். சமயோஜித புத்தியால் சில காரியங்களை முடிப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

ரிஷபம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். அவர்களிடம் கோபத்தை காட்ட வேண்டாம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும்.

          

மிதுனம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதியுண்டு. விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு புது வேலை கிட்டும். எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினரால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்ப்பீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்த்து விடவும்.

கடகம்: முன்கோபம் நீங்கும். நெருங்கிய நண்பரை சந்தித்து பேசுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். பிள்ளைகளின் நலனில் அதிகம் அக்கறைக் காட்டுவீர். அலுவலகரீதியான வெளியூர் பயணங்கள் திருப்தி தரும். வியாபாரத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்.

சிம்மம்: பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர். தாயாருடன் விவாதம் வந்து போகும். நட்பு வட்டம் விரியும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர். மனக் குழப்பங்கள் நீங்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருக்கவும். உத்தியோகம் சிறக்கும்.

கன்னி: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வாகனத்தை சீர் செய்வீர். உடல்சோர்வு நீங்கும். வியாபாரரீதியான பயணங்களால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும்.

துலாம்: பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பர். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். தாய்வழி உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் நிதானம் தேவை. பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்கவும். உத்தியோகம் சிறக்கும்.

விருச்சிகம்: குடும்பத்தில் குழப்பம் நீங்கி கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த பணம் தக்க சமயத்தில் வருவதால் கடனை பைசல் செய்வீர். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் பிறக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடப்பீர்.

தனுசு: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். மூத்த சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். வாகனத்தை சீர் செய்வீர்கள். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள்.

மகரம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். பணவரவால் சேமிப்புகூடும். குடும்பத்தினருடன் சென்று நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். பழைய சிக்கல்கள் விலகும். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

கும்பம்: வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்பார்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவர். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

மீனம்: கடந்த காலத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இப்போது ஆதரவாக நெருங்கி வர வாய்ப்பு உண்டு. பழைய வழக்கில் நல்ல தீர்ப்பு கிட்டும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும்.

SCROLL FOR NEXT