இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 16 நவம்பர் 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: எவ்​வளவு பணம் வந்​தா​லும் எடுத்து வைக்க முடிய​வில்லையே என்ற ஆதங்​கம் தீரும். செல​வைக் கட்​டுப்​படுத்தி சேமிப்​பீர்​கள். தாய்​வழி சொந்​தங்​கள் ஆதர​வாக இருப்​பார்​கள். தொழில், வியாபாரத்​தில் போட்​டிகளைத் தகர்ப்​பீர்​கள்.

ரிஷபம்: கடந்​தகால நினைவு​களால் மனதில் சந்​தோஷம் பொங்​கும். பழுதான வீடு, வாக​னத்தை சரிசெய்​வீர்​கள். பிள்​ளைகள் கேட்​டதை வாங்​கித் தரு​வீர்​கள். சரியாக திட்​ட​மிட்டு அலு​வல​கப் பணிகளை முடித்து, அதி​காரி​களிடம் பாராட்டு பெறு​வீர்​கள்.

மிதுனம்: எக்​காரியத்​திலும் நிதானமாக செயல்​படுவது அவ​சி​யம். குடும்​பத்​தில் மூத்​தோரின் அறி​வுரையைக் கேட்டு நடப்​பது நல்​லது. வாக​னம் செலவு வைக்​கும். வியாபாரத்​தில் பழைய சரக்​கு​கள் தேங்​கும். பல வகை​யிலும் பொருட்​கள் சேரும்.

கடகம்: நம்​பிக்கை, உற்​சாகத்​துடன் செயல்​பட்டு வேலைகளை முடிப்​பீர்​கள். குடும்​பத்​தில் அமைதி நில​வும். வியாபாரத்​தில் பணி​யாளர்​களை அனுசரித்​துச் செல்​லுங்​கள். உத்​யோகத்​தில் சக ஊழியர்​களின் ஆதரவு உண்டு. பேச்​சில் பொறுமை தேவை.

சிம்​மம்: வெளி வட்​டாரத்​தில் மதிப்பு, மரியாதை உயரும். பெரிய பத​விக்கு உங்​கள் பெயர் சிபாரிசு செய்​யப்​படும். பெற்​றோர் உடல்​நலம் திருப்​தி​கர​மாக இருக்​கும். கூட்​டுத் தொழி​லில் பங்​குதா​ரர்​களை பேசி சமாளிப்​பீர்​கள்.

கன்னி: குடும்​பத்​தில் சுப நிகழ்ச்​சிகள் ஏற்​பாடாகும். கையில் காசு பணம் புரளும். புதிய நபர்​களின் அறி​முகமும், அத​னால் ஆதாயமும் கிடைக்​கும். வியாபாரத்​தில் பழைய சரக்​கு​கள் விற்​றுத் தீரும். யாரை​யும் எடுத்​தெறிந்து பேசக் கூடாது.

துலாம்: மனதில் இருந்த குழப்​பங்​களுக்​குத் தீர்வு கிடைக்​கும். கணவன் - மனைவிக்​குள் மனஸ்தாபம் நீங்கி அன்​யோன்​யம் பிறக்​கும். பிள்​ளைகளால் மகிழ்ச்சி உண்டு. செலவு வைத்த வாக​னத்தை மாற்​று​வீர்​கள். வியாபாரத்​தில் லாபம் கிடைக்​கும்.

விருச்​சிகம்: திட்​ட​மிட்ட காரியங்​களை சிறப்​பாக செய்து முடிப்​பீர்​கள். பிள்​ளைகளின் வருங்​கால வளர்ச்​சிக்​கான திட்​டங்​களை செயல்​படுத்​து​வீர்​கள். உத்​யோகத்​தில் உயர் அதி​காரி நேசக்​கரம் நீட்​டுவார். நாடி வந்​தவர்​களுக்கு இயன்ற உதவியை செய்​வீர்​கள்.

தனுசு: எதிர்​பார்த்த பணம் கைக்கு வரு​வ​தால் மன​நிம்​மதி கிடைக்​கும். மனைவி வழி​யில் மரியாதை, அந்​தஸ்து உயரும். பெற்​றோரின் ஆசையை அறிந்து நிறைவேற்​று​வீர்​கள். ஆன்​மிகம், தியானம், யோகா​வில் நாட்​டம் அதி​கரிக்​கும்.

மகரம்: கணவன் - மனைவிக்​குள் வீண் வாக்​கு​வாதம் வந்​து போகும். வியாபாரத்​தில் பழைய பாக்​கி​களை போராடி வசூலிப்​பீர்​கள். அக்​கம் பக்​கத்​தினரின் செயல்​பாடுகள் எரிச்​சல், கோபத்தை ஏற்​படுத்​தும். ஆன்​மிகத்​தில் ஈடு​பாடு உண்​டாகும்.

கும்​பம்: இழுபறி​யாக இருந்த பழைய பிரச்​சினைகளை பேசித்தீர்ப்​பீர்​கள். கணவன் - மனைவிக்​குள் அன்​யோன்​யம் பிறக்​கும். கையில் காசு பணம் புரளும். வியாபாரத்​தில் போட்​டிகள் குறையும். பணி​யாளர்​கள் ஆதர​வாக இருப்​பார்​கள்.

மீனம்: சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். கவுரவப் பத​வி​கள் தேடி வரும். சகோ​தர, சகோ​தரி​களு​டன் இருந்த மனத்​தாங்​கல் நீங்​கும். பங்​குச் சந்தை, கமிஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. அரசு, வங்கி காரியங்​கள் நடந்து முடியும்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT