மேஷம்: பழைய பிரச்சினைகளைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். தந்தையின் உடல்நலம் சீராகும். பழைய நண்பர்கள் தேடி வருவர். தொழிலில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
ரிஷபம்: மகனின் படிப்புக்காக அலைய வேண்டி வரும். மகளின் திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரத்தில் அவசரப்பட வேண்டாம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
மிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். தாயாரின் உடல்நிலை சீராக அமையும். உறவினர் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் வீண் விவாதங்கள் நீங்கும். லாபம் கூடும். பயணம் திருப்தி தரும். அலுவலகரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.
கடகம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர். வியாபாரத்தில் வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்.
சிம்மம்: பிரியமானவர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி அடைவீர். குடும்பத்தினரிடம் மனம் விட்டுப் பேசுவீர். தலைவலி, தூக்கமின்மை நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
கன்னி: பிரபலங்கள் சிலரை சந்திப்பதால் உங்கள் வாழ்வில் சில மாற்றங்கள் வரக்கூடும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாட்கள் உதவிகரமாக இருப்பர். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்கவும். உத்தியோகம் சிறக்கும்.
துலாம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். புது வேலை கிடைக்கும். பிள்ளைகளின் பாச மழையில் நனைவீர்கள். அலுவலகத்தில் பணிகளை முடிப்பீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்.
விருச்சிகம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வீடு வந்து சேரும். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிட்டும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
தனுசு: முக்கிய முடிவுகளை கவனமாக எடுக்கவும். மூத்தோரின் சொல்பேச்சை கேட்டு செயல்படுங்கள். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் போராடி பாக்கிகள் வசூலிப்பீர். புதிய யுக்திகளைக்கையாண்டு வெற்றி பெறுவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
மகரம்: திடீரென்று அறிமுகமாகும் சிலரால் ஆதாயம் உண்டு. உறவினர், நண்பர்கள் தேடி வருவார்கள். குடும்பத்தில் நிம்மதி தங்கும். இழுபறியாக இருந்த அரசு வேலைகள் முடியும். வியாபார நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.
கும்பம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் பங்குதாரரின் கருத்துக்கு மதிப்பளிக்கவும். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
மீனம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவன் - மனைவிக்குள் இருந்த பனிப்போர் மாறும். பணவரவு உண்டு. வாகனச் செலவு குறையும். அலுவலக ரீதியாக சிலரை சந்திப்பீர். மேலதிகாரியின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும்.