இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 08 நவம்பர் 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலங்களை விற்பீர். வியாபாரரீதியாக வெளியூர் பயணங்கள் செல்வீர்.

ரிஷபம்: மனக்குழப்பம் நீங்கி தெளிவடைவீர். பூர்வீக மனை விற்பனையாகும். பிள்ளைகளால் நிம்மதி தங்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவர். லாபம் உண்டு.

மிதுனம்: குடும்பத்தினரிடம் மனம் விட்டுப் பேசுவீர். பிரியமானவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். சொந்த ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். வாகனம் சீராகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாளர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.

கடகம்: தன்னம்பிக்கைக்கு ஏற்ப சில விஷயங்கள் நடக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவு தருவர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மூன்றாம் நபர் தலையீட்டைத் தவிர்க்கவும். பணப் பற்றாக்குறை நீங்கும். வியாபார பாக்கிகள் வசூலாகும்.

சிம்மம்: அதிரடி முடிவுகளை எடுப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பர். ஆன்மிகவாதிகளை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவு உண்டு. புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர்.

கன்னி: குடும்ப வருமானம் உயரும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவு எடுப்பீர். வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும். பிள்ளைகளால் மனநிம்மதி கிட்டும். பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் விலகும். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்க வேண்டிவரும்.

துலாம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிவரும். குடும்பத்தில் நிதானம் தேவை. வியாபார ரீதியாக பயணம் மேற்கொள்வீர். பங்குதாரரின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நன்மை தரும்.

விருச்சிகம்: உறவினர்கள், பழைய நண்பர்கள் உங்கள் உதவி நாடி வருவார்கள். பிரபலங்கள் உதவுவர். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலங்களை விற்க முயற்சிப்பீர். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.

தனுசு: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவி இடையே இருந்த கருத்துவேறுபாடு களையப்படும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க எண்ணுவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்.

மகரம்: மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர். தாயாரின் உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். வியாபார ரீதியாக சில முடிவுகளை எடுப்பீர். பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நன்மை தரும்.

கும்பம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தடைபட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு நாள் குறிப்பீர். வராதிருந்த உறவினர்கள், நண்பர்கள் தேடி வருவார்கள். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். பங்குதாரர்கள் ஆதரவு தருவார்கள்.

மீனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சேமிப்பு கரைய வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி பிரச்சினைக்குள் மற்றவர்களை நுழைய விடாதீர்கள். உடன்பிறந்தவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT