மேஷம்: ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வாகனப்பழுது நீங்கும். புது நண்பர்கள் அறிமுகமாவர். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்: குடும்ப உறுப்பினர்களுக்குள் விவாதம் வரும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய முயற்சிப்பீர். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் வேண்டாம். அலுவலகத்தில் டென்ஷன் வரக்கூடும்.
மிதுனம்: பழைய பொன், பொருளை மாற்றிவிட்டு புதியன வாங்குவீர்கள். மனைவியின் சகோதரர்களால் ஆதாயமுண்டு. அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். வராது என்றிருந்த பணம் வந்து சேரும்.
கடகம்: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். கணவன்-மனைவிக்குள் இருந்த பனிப்போர் விலகும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரரீதியாக பயணம் மேற்கொள்வீர். உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.
சிம்மம்: பிரபலங்கள் சிலரை சந்திப்பதால் உங்கள் வாழ்வில் சில மாற்றங்கள் வரக் கூடும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவிகரமாக நடந்து கொள்வர். அலுவலகத்தில் பிறரை பற்றி தலைமையிடத்தில் புகார் கூற வேண்டாம்.
கன்னி: திட்டமிட்டபடி முடியாமலிருந்த வேலைகள் இன்று முடியும். தந்தையாருடன் இருந்த பனிப்போர் விலகும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர். சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார்.
துலாம்: குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். மாணவர்களின் கவனம் படிப்பில் திரும்பும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
விருச்சிகம்: திட்டமிட்ட வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வரும். விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
தனுசு: பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வீடு வந்து சேரும். குழப்பம் நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். பூர்வீக வீடு, மனையை விற்பனை செய்வீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் தேடி வருவர்.
மகரம்: உற்றார் உறவினர் வீடு தேடி வந்து பேசுவார்கள். பூர்வீக சொத்து தொடர்பான வழக்கில் வெற்றி காண்பீர். தடைபட்ட திருமணத்துக்கு நாள் குறிப்பீர். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகம் சிறக்கும்.
கும்பம்: பிரபலங்களால் ஆதாயமுண்டு. இங்கிதமாகப் பேசி சுற்றியிருப்பவர்களை அசத்துவீர்கள். மனைவி, பிள்ளைகளின் உடல் நலம் சீராகும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும்.
மீனம்: கூடுதலான பணவரவால் வீட்டிலுள்ள பழைய பொருட்களை மாற்றுவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த கருத்துவேறுபாடு விலகும். அலுவலகத்தில் உயரதிகாரி பாராட்டும்விதமாக நடப்பீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாள்வீர்.