இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 23 அக்டோபர் 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: விரும்​பிய பொருட்​களை வாங்கி மகிழ்​வீர். தடைபட்​டுக்கொண்​டிருந்த திரு​மணம் கைகூடி வரும். பூர்​வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்​டுவீர்​கள். பணப் பற்​றாக்​குறை நீங்​கும். வியாபாரத்தில் லாபம் பார்க்​கலாம். உத்​தி​யோகத்​தில் ஏற்​றம் உண்டு.

ரிஷபம்: குழப்​பம் நீங்கி மனதில் தெளிவு பிறக்​கும். தன்​னம்​பிக்​கையுடன் செயல்​பட்டு சில வேலைகளை செய்து முடிப்​பீர். ஆடம்​பர செல​வு​களைக் குறைத்து சேமிப்பை அதி​கரிப்​பீர். குடும்​பத்​தில் சுபநிகழ்ச்​சிகள் ஏற்​பாடாகும். வியாபாரம், உத்​தி​யோகம் சிறக்​கும்.

மிதுனம்: குடும்ப உறுப்​பினர்​களின் ஆதரவு கிட்​டும். மனைவி, பிள்​ளைகள் விரும்​பிய பொருட்​களை வாங்கி கொடுத்து மகிழ்​வீர்​கள். அலு​வல​கத்​தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்​கவும். வியாபாரத்​தில் பங்​குதா​ரர்​கள் ஆதரிப்​பர்.

கடகம்: சவால்​கள், ஏமாற்​றங்​களை கடந்து வெற்றி அடைவீர். கணவன் - மனைவிக்​குள் விட்​டுக் கொடுத்து போவது நல்​லது. கடனை பைசல் செய்​யும் அளவுக்கு பணவரவு உண்டு. அலு​வல​கத்​தில் அமைதி காக்​கவும். வியாபார நெளிவு சுளிவு​களைக் கற்​றுக் கொள்​வீர்.

சிம்​மம்: பிள்​ளைகளால் பொருட் செலவு வரக்​கூடும். சந்​திராஷ்டமம் இருப்​ப​தால் யாரை​யும் விமர்​சித்​துப் பேசாதீர். அண்டை வீட்​டாருடன் அளவாக பழகுங்​கள். வியாபாரத்​தில் திடீர் முடிவு​கள் வேண்​டாம். அலு​வலக ரீதி​யாக பயணங்​கள் மேற்​கொள்ள வேண்​டிவரும்.

கன்னி: பிரச்​சினைகளை சமாளிக்​கும் சக்தி கிடைக்​கும். ஓரளவு பணவரவு உண்டு. பூர்​வீக வீடு விற்​பனையாகும். வழக்​கு​களுக்கு தீர்வு கிடைக்​கும். வியாபார ரீதி​யாக முக்​கிய பிர​முகர்​களை சந்​திக்​கும் வாய்ப்பு உண்டு. அலு​வல​கத்​தில் மேலதி​காரிகள் ஆதரவு தரு​வர்.

துலாம்: பளிச்​சென்று பேசி எல்​லோரை​யும் கவரு​வீர். ஈகோ பிரச்​சினை தீர்ந்து தம்​ப​திக்​குள் நெருக்​கம் கூடும். உடன் பிறந்​தவர்​களின் ஆதரவு கிடைக்​கும். தொல்லை தந்த வாக​னத்தை மாற்​று​வீர். அலு​வல​கத்​தில் தேடிய ஆவணம் தென்​படும்.

விருச்​சிகம்: வெளியூரி​லிருந்து நல்ல செய்தி வரும். குடும்ப உறுப்​பினர்​களு​டன் கலந்​துரையாடி முக்​கிய முடிவு​களை எடுப்​பீர். உடன்​பிறந்​தவர்​களின் ஆதரவு கிட்​டும். வியாபாரத்​தில் பங்​குதா​ரரின் ஆலோ​சனையை நிராகரிக்க வேண்​டாம். அலு​வல​கத்​தில் மதிப்பு உயரும்.

தனுசு: உங்​களைச் சுற்​றி​யிருப்​பவர்​களால் இருந்து வந்த தொல்லைகள் அகலும். பழுதான எலக்ட்​ரானிக் பொருட்​களை மாற்​று​வீர். மனைவிவழி உறவினர்​களால் ஆதாயம் உண்டு. வியாபாரம் லாபம் தரும். அலு​வலக ரீதி​யாக வெளியூர் பயணம் மேற்​கொள்​வீர்.

மகரம்: புதிய எலட்​ரானிக்ஸ், கலை பொருட்​கள் வீடு வந்து சேரும். பழைய நண்​பர்​களால் ஆதாயம் உண்டு. தம்​ப​திக்​குள் இருந்த மனஸ்தாபம் நீங்கி அன்​யோன்​யம் பிறக்​கும். வியாபாரத்​தில் வாடிக்​கை​யாளர்​களை கவரு​வீர். உத்​தி​யோகம் சிறக்​கும்.

கும்​பம்: ராசிக்​குள் சந்​திரன் இருப்​ப​தால் திட்​ட​மிட்ட வேலையை போராடி முடிப்​பீர். கணவன் மனைவிக்​குள் கருத்​து ​மோதல் வரலாம். பிள்​ளைகளின் உடல் நலத்​தில் கவனம் செலுத்​தவும். அலு​வல​கத்​தில் புதிய பத​விக்கு பரிந்​துரைக்​கப்​படுவீர். வியாபாரம் லாபம் தரும்.

மீனம்: எதிர்​மறை எண்​ணங்​கள் வந்து நீங்​கும். குழப்​பம் நீங்கி குடும்​பத்​தில் மகிழ்ச்சி உண்டு. பிள்​ளைகளால் அலைச்​சல் இருக்​கும். மனை, விவசாய நிலம் விற்​பனையாகும். வியாபாரத்​தில் போட்​டிகளை சமாளிப்​பீர்​கள். அலு​வல​கத்​தில் பெருமையடைவீர்கள்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT