இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 22 அக்டோபர் 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: குடும்​பத்​தினருடன் கலந்​தாலோ​சித்து சில முக்​கிய முடிவு​களை எடுப்​பீர். பிள்​ளைகள் ஒத்​துழைப்பு தரு​வார்​கள். நண்​பர்​கள் உங்​களைப் புரிந்து கொள்​வர். அலு​வல​கத்​தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்​கவும்.

ரிஷபம்: பேச்​சில் கம்​பீரம் பிறக்​கும். சகோ​தர வகை​யில் எதிர்​பார்த்த உதவி​கள் கிடைக்​கும். தாயாரின் மருத்​து​வச் செல​வு​கள் படிப்​படி​யாக குறையும். பிள்​ளைகள் படிப்பு தொடர்​பாக அலைச்​சல் இருக்​கும். அலு​வல​கத்​தில் தேடிய முக்​கிய ஆவணம் தென்​படும்.

மிதுனம்: இழுபறி​யாக இருந்த வேலைகள் முடியும். தந்​தையாரின் உடல்​நிலை சீராகும். அரசு சம்​பந்​தப்​பட்ட காரியம் சாதக​மாகும். நண்​பர்​கள் மத்​தி​யில் மதிப்பு உயரும். வியாபாரத்​தில் சரக்​கு​கள் விற்​றுத் தீரும். அலு​வல​கத்​தில் விவாதங்​களை தவிர்ப்​பது நல்​லது.

கடகம்: சந்​திராஷ்டமம் இருப்​ப​தால் விரயம், டென்​ஷன் வரலாம். அவசர முடிவு​களை தவிர்த்​து​விடுவது நல்​லது. தாயார், பிள்​ளைகளின் உடல்​நலத்​தில் கவனம் தேவை. வியாபாரத்​தில் போட்​டிகளை சமாளிப்​பீர். அலு​வலக ரீதி​யாக பயணங்​கள் மேற்​கொள்ள வேண்டி வரும்.

சிம்​மம்: எதிலும் மகிழ்ச்சி கிட்​டும். வெளிப்​படை​யான பேச்​சால் சில காரியங்​களை முடித்​துக் காட்​டுவீர். ஈகோ பிரச்​சினை தீர்ந்து தம்​ப​திக்​குள் அன்​யோன்​யம் பிறக்​கும். அலு​வல​கத்​தில் மேலதி​காரி பாராட்​டுவார். வியாபார ரீதி​யாக பிரபலங்​களை சந்​திக்​கும் வாய்ப்பு கிடைக்​கும்.

கன்னி: பணப்​பிரச்​சினையை சமாளிக்க வழி கிடைக்​கும். குடும்​பத்​தின​ரால் மன​நிம்​மதி உண்டு. வியாபாரத்​தில் முக்​கிய பிர​முகர்​கள் அறி​முக​மாவர். வரவு செல​வு​களில் கவனமாக இருக்​கவும். அலு​வல​கத்​தில் யாரை​யும் பகைத்​துக் கொள்​ளாதீர்​கள்.

துலாம்: கைமாற்​றாக வாங்​கி​யிருந்த பணத்தை தந்து முடிப்​பீர். மன​நிறைவுடன் காணப்​படுவீர். குடும்​பத்​தில் அனுசரித்​துப் போவீர். வியாபாரத்​தில் புதிய யுக்​தி​களை கையாள்​வீர். அலு​வல​கத்​தில் மேலதி​காரி​கள் ஆலோ​சனை தரு​வர்.

விருச்​சிகம்: புதிய கோணத்​தில் சிந்​தித்து செயல்​படுவீர். உறவினர், அரசு அதி​காரி​களின் உதவியால் சில காரியங்​களை முடிப்​பீர். வியாபாரத்​தில் புதி​ய​வர்​களின் அறி​முகம் கிடைக்​கும். அலு​வல​கத்​தில் சக ஊழியர் மத்​தி​யில் மதிப்பு உயரும்.

தனுசு: உடன்​பிறந்​தோர் உங்​கள் வார்த்​தைக்கு மதிப்பு கொடுப்​பர். உங்​களால் மற்​றவர்​கள் ஆதாயமடைவர். விருந்​தினர் வருகை​யால் வீடு களைகட்​டும். வாக​னத்தை சீர் செய்​வீர். அலு​வல​கத்​தில் விவாதங்​களை தவிர்ப்​பது நல்​லது. வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்​கலாம்.

மகரம்: புது வேலை​வாய்ப்​பு​கள் தேடி வரும். குடும்ப உறுப்​பினர்​களு​டன் சுபநிகழ்ச்​சிகளில் கலந்து கொள்​வீர். வீட்டை அழகுப்​படுத்​து​வீர். நவீன மின்​னணு சாதனம் வாங்​கு​வீர். அலு​வல​கத்​தில் மதிப்பு உயரும். வியாபாரம் திருப்தி தரும். பங்​குதா​ரர்​கள் அறி​வுரை தரு​வர்.

கும்​பம்: ராசிக்​குள் சந்​திரன் தொடர்​வ​தால் செல​வு​களை குறைக்க முடி​யாமல் திணறு​வீர். தம்​ப​திக்​குள் விட்​டுக் கொடுத்து போவது நல்​லது. அக்​கம் பக்​கத்​தினரில் சிலர் உதவுவதை போல் உபத்​திரவம் தரு​வர். அலு​வல​கத்​தில் மேலதி​காரி பாராட்​டுவார்.

மீனம்: தடைப்பட்டிருந்த காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் நல்ல தீர்வு காண்பீர். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவருவீர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT