மேஷம்: குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். ஆடை ஆபரணங்கள் வீடு வந்து சேரும். சுறுசுறுப்புடன் செயல்படுவதால் காரியங்களில் வெற்றியுண்டு. பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
ரிஷபம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். கணவன் - மனை விக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் வராது என்றிருந்த கடன் தானாக வந்து சேரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.
மிதுனம்: தடைபட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வெளியூர் பயணம் சாதகமாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்ப்பீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
கடகம்: சந்திராஷ்டமம் நடப்பதால் குடும்பத்தாரிடம் வீண் விவாதங்கள் வேண்டாம். வாகனத்தில் நிதானமாக பயணம் செய்யவும். அலுவலக பணிச்சுமையால் உடல் அசதி வரக்கூடும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள்.
சிம்மம்: தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை, வீண் சந்தேகம் விலகும். வெளிவட்டாரத்தில் புது பொறுப்பு, பதவிகள் தேடி வரும். வியாபாரம் சூடு பிடித்து ஓரளவு நல்ல லாபம் பார்க்கலாம். பங்குதாரர்கள் ஆதரிப்பர். அலுவலகத்தில் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.
கன்னி: சொந்த ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். கையில் பணம் புரளும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் உண்டாகும். உடல்நலம் சீராகும். அரசாங்க அதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவார்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
துலாம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். பூர்வீக வீடு, மனை விற்பனையாகும். சுற்றியிருப்பவர்களில் நல்லவர்களை அடையாளம் காண்பீர். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.
விருச்சிகம்: வெளியூர் பயணங்கள் மனநிம்மதியை தரும். நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டு. வாகனப் பழுது நீங்கும். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பர்.
தனுசு: குடும்பத்தில் மகனின் திருமணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
மகரம்: எளிதில் முடித்து விடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் முடியும். பிள்ளைகளின் நடவடிக்கையை கவனிப்பது நல்லது. மனக்குழப்பம் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.
கும்பம்: மறைமுகப் போட்டி இருக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். விரயச் செலவுகள் வரும். அலுவலகத்தில் பணிகளை முடிப்பது நல்லது. புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். பொறுப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்க்கலாம்.
மீனம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர். வீடு பராமரிப்புச் செலவுகள் கூடும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். மின்னணு சாதனங்கள் வாங்கி மகிழ்வீர். அலுவலகத்தில் அமைதிகாக்கவும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெல்வீர்.