இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 17 அக்டோபர் 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: புத்​தி​சாலித்​தனம் வெளிப்​படும். பிரபலங்​கள் நண்​பர்​களா​வார்​கள். குழப்​பம் நீங்கி வீட்​டில் அமைதி நில​வும். பணவரவு திருப்தி தரும். ஆன்​மிகத்​தில் மனம் செல்​லும். வியா​பாரம் சூடு பிடித்து லாபம் பார்க்​கலாம். அலு​வல​கத்​தில் விவாதங்​களை தவிர்ப்​பது நல்​லது.

ரிஷபம்: வெளிவட்​டாரத்​தில் தேவையற்ற பேச்சை தவிர்க்​க​வும். குடும்​பத்​தில் சிறு குழப்​பங்​கள் வரும். உங்​கள் மீது சிலர் வீண்​பழி சுமத்​து​வர். பூர்​வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்​டு​வீர். வியா​பார நெளிவு சுளிவு​களைக் கற்​றுக் கொள்​வீர். உத்​தி​யோகம் சிறக்​கும்.

மிதுனம்: திட்​ட​மிட்ட காரி​யம் கைகூடும். எதிர்​பார்த்த உதவி​கள் கிடைக்​கும். குடும்​பத்​தில் அமைதி நில​வும். உடல்​அசதி வில​கும். பணவரவு திருப்தியாக அமை​யும். வியா​பாரத்தை விரிவுபடுத்​தும் முயற்​சி​யில் இறங்​கு​வீர். அலு​வல​கத்​தில் அமைதி காப்​பது நல்​லது.

கடகம்: குடும்​பத்​தில் கலகலப்​பான சூழல் ஏற்​படும். முகப்​பொலிவு கூடும். அதி​காரப்​பூர்​வ​மாக செயல்​பட்டு சில பணி​களை முடிப்​பீர். பிள்​ளை​களின் சாதனை​களால் பெரு​மையடைவீர். வியா​பாரரீ​தி​யாக பிரபலங்​களை சந்​திப்​பீர். உத்​தி​யோகத்​தில் ஏற்​ற​முண்​டு.

சிம்​மம்: எதி​லும் வெற்றி பெறு​வீர். ஈகோ பிரச்​சினை தீர்ந்து தம்​ப​திக்​குள் நெருக்​கம் அதி​கரிக்​கும். பிள்​ளை​கள் பொறுப்பு அறிந்து செயல்​படு​வர். பணவரவு உண்​டு. வியா​பாரரீ​தி​யான பயணங்​கள் திருப்தி தரும். அலு​வல​கத்​தில் அடுத்​தவர் விஷ​யத்​தில் தலை​யி​டாதீர்.

கன்னி: சோர்வு நீங்கி சுறுசுறுப்​புடன் செயல்​படு​வீர்​கள். பண வரவு உண்​டு. பால்ய நண்​பர்​கள் உங்​களைத் தேடி வந்து உதவி கேட்​பர். ஆன்​மிக​வா​தி​களை சந்​திப்​பீர்​கள். வியா​பாரத்​தில் புதிய பங்​கு​தா​ரர்​களின் ஆதரவு கிட்​டும். அலு​வல​கத்​தில் தேடிய ஆவணம் தென்​படும்.

துலாம்: நண்​பர்​கள் உதவி​கர​மாக இருப்​பார்​கள். குடும்​பத்​தினரின் விருப்​பத்தை நிறைவேற்​று​வீர்​கள். பிள்​ளை​களால் அந்​தஸ்து உயரும். வியா​பாரத்​தில் வராக் கடன் என்​றிருந்த பாக்​கி​கள் வரும். அலு​வலக ரீதி​யாக முக்​கிய பிர​முகர்​களை சந்திப்பீர்.

விருச்​சிகம்: பிரபலங்​களின் உதவியை நாடிச் செல்​வீர். குடும்​பத்​தினரின் விருப்​பங்​களுக்கு முக்​கி​யத்​து​வம் கொடுக்​க​வும். வாக​னப் பராமரிப்பு செலவு வரும். அலு​வல​கப் பணி​களை விரைந்து முடிப்​பீர். வியா​பார நெளிவு சுளிவு​களைக் கற்று அதிக லாபம் ஈட்​டு​வீர்.

தனுசு: திட்​ட​மிட்​டது ஒன்​றும், நடப்​பது வேறாக​வும் இருக்​கும். நன்றி மறந்த ஒரு​வரை நினைத்து வருந்​து​வீர். பூர்​வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்த முயற்​சிப்​பீர். வியா​பாரத்​தில் அலைச்​சல் அதி​கரிக்​கும். அலு​வல​கத்​தில் யாரைப் பற்​றி​யும் தலை​மை​யிடத்​தில் புகார் கூறாதீர்.

மகரம்: திட்​ட​மிட்ட காரி​யங்​களை எப்​படி​யா​வது முடித்து விட வேண்​டும் என்ற வைராக்​கி​யம் பிறக்​கும். தடு​மாற்​றம் நீங்​கும். உடன் பிறந்​தவர்​களின் ஆதர​வுடன் பூர்​வீகச் சொத்தை மாற்​றியமைப்​பீர். அலு​வல​கத்​தில் நிம்​ம​தி​யுண்​டு. வியா​பாரத்​தில் பங்​கு​தா​ரர்​கள் ஆதரிப்​பர்.

கும்​பம்: நீண்​ட​நாள் விருப்​பங்​கள் நிறைவேறும். சுப நிகழ்ச்​சிகளில் முதல் மரி​யாதை கிட்​டும். பிள்​ளை​களின் உடல்​நலம் சீராகும். வருங்​காலம் குறித்து முடிவு எடுப்​பீர். வியா​பாரத்​தில் யாரை​யும் பகைத்​துக் கொள்ள வேண்​டாம். அலு​வல​கத்​தில் புதிய பதவி கிடைக்​கும்.

மீனம்: குடும்​பத்​தில் ஒரு​வரு​வருக்​கொரு​வர் சரி​யான புரிதல் ஏற்​படும். பிள்​ளை​களின் நடவடிக்​கை​களில் கவனம் செலுத்​த​வும். வி​யா​பாரத்தை விரிவுபடுத்​து​வீர். அலு​வல​கத்​தில்​ பணிச்​ சுமை குறை​யும்​. மேல​தி​காரி​யின்​ ​பா​ராட்​டு கிட்​டும்​.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT