இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 16 அக்டோபர் 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: அதி​காரப் பதவி​யில் இருப்​பவர்​களின் நட்பு கிடைக்​கும். வீடு கட்ட பிளான் அப்​ரூவலாகி வரும். வியா​பாரத்​தில் புதிய யுக்​தி​களைக் கையாண்டு பழைய வாடிக்​கை​யாளர்​களைக் கவரு​வீர். அலு​வல​கத்​தில் இருந்து வந்த பிரச்​சினை​களுக்கு தீர்வு காண்​பீர்​கள்.

ரிஷபம்: பணவரவு தாமத​மாகலாம். சந்​தி​ராஷ்டமம் தொடர்​வ​தால் தேவையற்ற விஷ​யங்​களை மனதில் நினைத்து குழம்​பிக் கொண்​டிருக்​காதீர்​கள். குடும்​பத்​தில் சலசலப்பு வந்து நீங்​கும். வாக​னத்​தில் கவனம் தேவை. உத்​தி​யோகத்​தில் முன்​னேற்​றம் காண்​பீர்.

மிதுனம்: உங்​களின் இலக்கை நோக்கி முன்​னேறு​வீர். ஈகோ பிரச்​சினை தீர்ந்து தம்​ப​திக்​குள் அன்​யோன்​யம் பிறக்​கும். வாக​னப் பழுது நீங்​கும். வியா​பாரத்​தில் பணி​யாட்​கள் அனுசரணை​யாக நடந்து கொள்​வார்​கள். அலு​வல​கத்​தில் விவாதங்​களை தவிர்த்​து​விட​வும்.

கடகம்: நெருக்​க​மானவர்​களின் பிரச்​சினை​களை தீர்த்து வைக்க முற்​படு​வீர். முன்​கோபம் வில​கும். விருந்​தினர் வரு​கை​யால் செல​வு​கள் இருந்​தா​லும் சந்​தோஷ​முண்​டு. அலு​வல​கத்​தில் தேடிய ஆவணம் தென்​படும். வியா​பாரத்​தில் பங்​கு​தா​ரர்​களின் ஆதரவு கிடைக்​கும்.

சிம்​மம்: பிரபலங்​கள் வீட்டு விசேஷங்​களில் கலந்து கொள்​வீர். மகனின் படிப்​பு, மகளின் திரு​மணம் என்று இருந்த அலைச்​சல், டென்​ஷன் வில​கும். சமூக அந்​தஸ்து உயரும். கூட்​டுத்​தொழிலில் இருந்து வந்த குழப்​பங்​கள் நீங்​கும். அலு​வல​கத்​தில் அமைதி காப்​பது நல்​லது.

கன்னி: எதை​யும் சாதித்​து​விடலாம் என்ற எண்​ணம் வரும். பிரபலங்​கள் சிலரின் அறி​முகம் கிடைக்​கும். மாணவர்​கள் படிப்​பில் ஆர்​வம் காட்​டு​வர். கூட்​டுத் தொழிலில் பங்​கு​தா​ரர்​களின் ஆதரவு உண்டு. அலு​வலக ரீதி​யாக வெளியூர் பயணம் மேற்​கொள்ள வேண்​டிவரும்.

துலாம்: எதிர்ப்​பு​களை தகர்த்​தெறிந்து வெற்றி காண்​பீர். பணவரவு திருப்தி தரும். பிரபலங்​கள் அறி​முக​மாவர். பிள்​ளை​களின் விருப்​பங்​களைக் கேட்​டறிந்து பூர்த்தி செய்​வீர்​கள். வியா​பாரத்​தில் பாக்​கி​கள் வசூலாகும். அலு​வல​கத்​தில் தேடிய ஆவணம் தென்​படும்.

விருச்​சிகம்: வீட்​டில் பழுதடைந்த மின்​னணு, மின்​சார சாதனங்​களை மாற்​று​வீர். பிரச்​சினை​கள் எது​வா​னாலும் அதை எதிர்​கொண்டு சமாளிக்​கும் மன வலிமை கூடும். தாய்​வழி உறவினர்​களால் நிம்​மதி கிட்​டும். வியா​பாரம் சூடு பிடிக்​கும். அலு​வல​கத்​தில் விவாதம் வேண்​டாம்.

தனுசு: ராசிக்​குள் சந்​திரன் இருப்​ப​தால் குடும்​பத்​தினரின் ஆதரவு உண்​டு. செல​வு​களை கட்​டுப்​படுத்​து​வது நல்​லது. பிள்​ளை​களின் உடல்​நலத்​தில் கவனம் தேவை. பூர்​வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்​து​வீர். அலு​வல​கத்​தில் பணிச்​சுமை கூடும்.

மகரம்: திட்​ட​மிட்​டபடி செயல்​படு​வீர்​கள். குடும்​பத்​தில் சந்​தோஷம் தங்​கும். தொழில​திபர்​கள் அறி​முக​மாவர் வங்​கிக் கடனுதவி கிடைக்​கும். மாணவர்​களின் கவனம் படிப்​பில் திரும்​பும். அலு​வல​கத்​தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்​க​வும். வியா​பாரம் சிறக்​கும்.

கும்​பம்: புதிய யோசனை​கள் பிறக்​கும். பணவர​வால் பழைய கடன் தீரும். தம்​ப​திக்​குள் நெருக்​கம் கூடும். வியா​பாரத்​தில் நெளிவு சுளிவு​களைக் கற்​றுக் கொள்​வீர். பணி​யாட்​களின் ஆதர​வுண்​டு. அலு​வல​கத்​தில் மகிழ்ச்சி தங்​கும். புதிய பதவிக்கு பரிந்​துரை செய்​யப்​படு​வீர்​கள்.

மீனம்: தடைபட்ட பணி​கள் முடிவுக்கு வரும். கோயில் விசேஷங்​களை முன்​னின்று நடத்​து​வீர். மனை​வி வழி​யில் ஆதா​யம் உண்​டு. வி​யா​பாரத்​தில் புதிய யுக்​தி​களை கையாண்டு வாடிக்​கை​யாளர்​களை கவரு​வீர்​. அலு​வல​கத்​தில்​ மேல​தி​காரி ஆதரவு தரு​வார்​.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT