இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 11 செப். 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: பொறுத்திருந்து சில காரியங்களை முடிப்பது நல்லது. செலவுகளைக் குறைத்து சேமிக்க முயற்சிப்பீர். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர். அலுவலகத்தில் விவாதங்களைத் தவிர்ப்பீர்.

ரிஷபம்: ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். மனைவிவழி உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது.

மிதுனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப் பீர். சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிட்டும். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

கடகம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர். பிள்ளைகளின் விருப்பங்களைக் கேட்டறிந்து நிறைவேற்றுவீர். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு பழைய வாடிக்கை யாளர்களை கவருவீர். அலுவலகத்தில் பணிச்சுமை இருக்கும்.

சிம்மம்: தம்பதிக்குள் மனஸ்தாபம் ஏற்படும். பேச்சில் கவனம் தேவை. பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக டென்ஷன் வந்து போகும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

கன்னி: அதிரடியாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். உடல் சோர்வு, சோம்பல் அதிகரிக்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரம் சூடு பிடிக்கும்.

துலாம்: ஈகோ பிரச்சினை தீர்ந்து நெருக்கம் உண்டாகும். பணவரவு திருப்தி தரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். வாகனப் பழுது நீங்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெல்வீர்.

விருச்சிகம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்பட்டு சாதிப்பீர்கள். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.

தனுசு: குடும்பத்தினருடன் விவாதங்கள் வந்து போகும். திடீர் பயணம், செலவுகள் ஏற்படலாம். திட்டமிட்ட பணிகளை விரைந்து முடிப்பீர். வங்கியில் எதிர்பார்த்த உதவி கிட்டும். வியாபாரத்தில் பங்குதாரர் ஆதரிப்பார். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.

மகரம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். விரயச் செலவு வரக்கூடும். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்டவை விற்பனை யாகும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.

கும்பம்: பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். வியாபாரத்தில் ஏற்றம் உண்டு.

மீனம்: நம்பிக்கைக்கு உரியவர்கள் உதவி புரிவர். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சோம்பல் நீங்கி, உற்சாகம் அடைவீர். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.

SCROLL FOR NEXT