மேஷம்: பழைய நல்ல நினைவுகளில் மூழ்குவீர். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது.
ரிஷபம்: இங்கிதமாகப் பேசி காரியம் சாதிக்க வேண்டும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் பணியாட்களின் தொந்தரவு வரக்கூடும். பங்குதாரர் ஆலோசனை தருவார்.
மிதுனம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
கடகம்: ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உங்கள் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பர். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர்.
சிம்மம்: மனதில் இருந்த பயம் விலகும். பணவரவு, திருப்தி தரும். உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும்.
கன்னி: சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்கள் வாங்கி வீட்டை அலங்கரிப்பீர். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அலுவலக ரீதியாக பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் கடையை மக்கள் அதிகம் கூடும் இடத்துக்கு மாற்றுவீர்.
துலாம்: குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். மகனின் வேலை, மகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல், டென்ஷன் வந்து போகும். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
விருச்சிகம்: ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப் பற்றாக்குறை நீங்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர். வியாபாரத்தில் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
தனுசு: சுறுசுறுப்புடன் செயல்களை விரைந்து முடிப்பீர். சிந்தனைத் திறன் கூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். தாயார், மனைவியின் ஆரோக்கியம் சீராகும். வியாபாரம் சூடு பிடிக்கும். இழுபறியாக இருந்த பாக்கிகள் வசூலாகும். உத்தியோகம் சிறக்கும்.
மகரம்: நேர்மறை சிந்தனைகள் மனதில் உற்சாகத்தை தரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வியாபார ரீதியாக நண்பர்களை சந்திப்பீர் பணியாட்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
கும்பம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். மனதுக்கு பிடித்தவர்களுக்காக செலவு செய்வீர். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர். வியாபாரம் சிறக்கும்.
மீனம்: தடைபட்ட சில வேலைகளை முடிப்பதால் மனநிறைவு உண்டாகும். சகோதரரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். முன்கோபம் குறையும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர். அலுவலக ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.