இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 01 செப். 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். மகனின் வேலை, மகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல், விரயச் செலவுகள் வரலாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். அலுவலக ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.

ரிஷபம்: தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் கை கூடி வரும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் உண்டு. உடன் பிறந்தவர்களின் ஆதரவுடன் பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

மிதுனம்: பழைய பிரச்சினைக்கு புது தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.

கடகம்: புதியவர்களின் நட்பு கிட்டும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர். பூர்வீக சொத்து வழக்குகள் சாதகமாக முடியும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

சிம்மம்: எதிர்பார்த்து காத்திருந்த தொகை வந்து சேரும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். வியாபாரத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

கன்னி: தாயார், பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். தம்பதிக்குள் சின்னச் சின்ன கருத்துமோதல் வரலாம். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. புதிய பங்குதாரரின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர்.

துலாம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். நம்பிக்கைக்கு உரியவர்களின் அறிமுகம் கிட்டும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகள் முடியும்.

விருச்சிகம்: பிரியமானவர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி அடைவீர். குடும்ப உறுப்பினர்களிடம் மனம்விட்டுப் பேசுவீர். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. அலுவலகரீதியாக பிரபலங்களின் உதவியை நாடுவீர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

தனுசு: எதையும் திட்டமிட்டு செய்யவும். இழுபறியாக இருந்த பணிகளை உடனே முடிக்க நினைப்பீர்கள். பழைய கடன் பிரச்சினை தீரும். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் விற்பனையாகும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் நற்பெயர் கிடைக்கும்.

மகரம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உடல்நிலை சீராக அமையும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். கூட்டுத்தொழிலில் பங்குதாரருடன் இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். லாபம் அதிகரிக்கும். அலுவலகரீதியான பயணங்கள் திருப்தி தரும்.

கும்பம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிட்டும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். நவீன மின்னணு சாதனம் வாங்குவீர். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: பணவரவால் பழைய கடன்களை அடைப்பீர். பிரபலங்களின் அறிமுகம் கிட்டும். வேற்றுமொழி, மதத்தினர் உதவிகரமாக இருப்பர். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

SCROLL FOR NEXT