மேஷம்: பொது காரியங்களில் ஈடுபடுவீர். சோர்வு நீங்கி முக மலர்ச்சி யுடன் காணப்படுவீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.
ரிஷபம்: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் சாதகமாகும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். மேலதிகாரிகள் பாராட்டுவர். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவர்.
மிதுனம்: மனதை உறுத்திய விஷயத்துக்கு முடிவு கட்டுவீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பூர்வீக வீட்டை விற்க முயற்சிப்பீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பணியாட்களின் ஆதரவு கிட்டும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
கடகம்: தாய்வழி உறவினர்களால் மனக்கசப்புகள் வந்து போகும். முன்கோபத்தை தவிர்க்கவும். பிள்ளைகள் பொறுப்பு அறிந்து செயல் படுவார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் அவசர முடிவு வேண்டாம். பங்குதாரரின் ஆலோசனையை ஏற்கவும்.
சிம்மம்: தாய்வழி உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். பால்ய நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. கூட்டுத் தொழிலில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றி பெறுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகள் அன்பு காட்டுவர்.
கன்னி: தடைபட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்கள் இனி தடபுடலாக நடக்கும். பால்ய நண்பர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். வியாபாரரீதியாக சில முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
துலாம்: குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு பெருகும். எதார்த்தமான பேச்சால் தடைபட்ட காரியங்களை முடிப்பீர். தாயார், பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் பணியாட்கள் உதவிகரமாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
விருச்சிகம்: புதுப்புது எண்ணங்கள் மனதில் தோன்றும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உண்டு. தந்தையின் உடல்நலம் சீராகும். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரம் சூடு பிடித்து, திருப்தி தருவதாக அமையும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.
தனுசு: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பணவரவு உண்டு. நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். பூர்வீக சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வியாபாரரீதியாக பிரபலங்களை சந்திப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஆதரவு தருவர்.
மகரம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். திட்டமிட்ட வேலைகளை முடிப்பதில் தடுமாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்கள் தொந்தரவு தருவார்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நன்மை தரும்.
கும்பம்: பழைய பிரச்சினைகளை சுமுகமாக பேசித் தீர்ப்பீர்கள். குழப்பம் நீங்கி வீட்டில் நிம்மதி பிறக்கும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் அனுபவமிக்க பணியாட்கள் வருவர். அலுவல கத்தில் உங்களின் உழைப்புக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும்.
மீனம்: உங்கள் புதுமுயற்சிக்கு குடும்ப உறுப்பினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தந்தைவழி உறவினர்களால் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்து காத்திருந்த பணம் கிடைக்கும். பழைய கடன் பிரச்சினை தீரும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.