மேஷம்: சவாலான காரியங்களை சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர்கள். தடைகள் யாவும் நீங்கும். முக்கிய முடிவுகள் எடுப்பீர். வியாபாரத்தில் போட்டி குறையும். லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
ரிஷபம்: பேசாமல் இருந்த உறவினர் வலிய வந்து பேசுவார். புதிய நண்பர்கள் உதவுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். புதிய பங்குதாரர்களின் ஆலோசனையை நிராகரிக்காதீர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.
மிதுனம்: கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் குதூகலமான சூழல் உருவாகும். வியா பாரத்தை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படவும்.
கடகம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நன்மை தரும்.
சிம்மம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.
கன்னி: தவிர்க்க முடியாத செலவுகளும், பயணங்களும் வரும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். பங்குதாரர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும். அலுவலக ரீதியாக பயணம் மேற்கொள்வீர்கள்.
துலாம்: குடும்பத்தாரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். தாய்வழி சொந்தங்களுடன் இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் முடிவுக்கு வரும். மனைவி, தாயாரின் உடல் நிலை சீராகும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிட்டும். அலுவலகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும்.
தனுசு: மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடப்பார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் விதமாக வங்கி கடனுதவி பெற முயற்சிப்பீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.
மகரம்: முகத்தில் தெளிவு பிறக்கும். மனைவிவழியில் நற்செய்தி உண்டு. அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்கவும். அலுவலகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்.
கும்பம்: பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போகவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் நிதானம் தேவை. அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
மீனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். தாய்வழி உறவினர்கள், பழைய நண்பர்கள் உதவுவர். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.