இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: முகப்பொலிவு கூடும். விருந்தினர், நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். வெளியூர் பயணத்தால் நன்மை ஏற்படும்.

ரிஷபம்: பிள்ளைகளின் உடல் நலனில் கூடுதல் அக்கறை காட்டுவது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக செயல்படக் கூடும். அடுத்தவர் விவகாரத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம்.

மிதுனம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். விரோதியாக நினைத்தவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் மேலதிகாரி களின் ஆதரவு கிடைக்கும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

கடகம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பிள்ளைகளின் விருப்பங்களை உடனுக் குடன் பூர்த்தி செய்வீர்கள். கூட்டுத்தொழிலில் இருந்துவந்த பிரச்சினை நீங்கும். குடும்பத்துடன் வெளியூர் செல்ல திட்டமிடுவீர்கள்.

சிம்மம்: பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் திட்டமிட்டதைவிட அதிகரிக்கும்.

கன்னி: விஐபிகள் அறிமுகமாவார்கள். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கி கடன் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

துலாம்: குடும்பத்தில் கருத்துவேறுபாடுகள் ஏற்படக் கூடும். பழைய சொத்து பிரச்சினைகளை இப்போது பேச வேண்டாம். நண்பர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்துவார்கள். யாருக்கும் ஜமீன், உத்தரவாதக் கையெழுத்திட வேண்டாம். வாகனம் செலவு வைக்கும்.

விருச்சிகம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து நீண்டகால பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். தொழில்ரீதியாக விஐபிகளைச் சந்திப்பீர்கள். அலுவலகத்தில் வேலைப் பளு குறையும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

தனுசு: குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை உங்கள் ரசனைக்கேற்ப விரிவு படுத்துவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். தாயார் ஆதரவாக இருப்பார்.

மகரம்: மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். தந்தையின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். வெளியூர் பயணம் உண்டு.

கும்பம்: கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் மறையும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரும். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள். வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள்.

மீனம்: வெளியூர் பயணங்களால் ஆதாயமுண்டு. அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். மனைவிவழி உறவினர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். குடும்பத்துடன் புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள்.

SCROLL FOR NEXT