இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 03 ஆகஸ்ட் 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: தேவையற்ற அச்சம், கவலைகள் நீங்​கி, நம்​பிக்​கை, உற்​சாகத்​துடன் காணப்​படு​வீர்​கள். நீண்​ட​நாள் ஆசைகளை பூர்த்தி செய்​து​கொள்​வீர்​கள். கணவன் - மனை​விக்​குள் மனஸ்​தாபம் நீங்​கி, அன்​யோன்​யம் அதி​கரிக்​கும். பெற்​றோர் உடல்​நிலை சீராகும்.

ரிஷபம்: குடும்​பத்​தில் நில​விய கார​சா​ர​மான விவாதங்​கள் மறை​யும். பிள்​ளை​களால் மரி​யாதை, அந்​தஸ்து உயரும். நல்​ல​வர்​களின் நட்பு கிடைக்​கும். தொழில், வியா​பாரம் சூடு​பிடிக்​கும். உத்​யோகத்​தில் உயர் அதி​காரி​களின் பாராட்​டு​களைப் பெறு​வீர்​கள்.

மிதுனம்: கேட்ட இடத்​தில் பண உதவி கிடைக்​கும். வெளிவட்​டாரத்​தில் மகிழ்ச்சி தங்​கும். குழப்​பம் நீங்கி தெளிவு பிறக்​கும். தள்​ளிப்​போன காரி​யங்​கள் விறு​விறுப்​பாக நடந்து முடி​யும். தொழிலில் போட்​டிகள் குறை​யும். ஆன்​மிகத்​தில் ஈடு​பாடு உண்​டாகும்.

கடகம்: புதி​ய​வர்​களு​டன் நட்பு மலரும். பணவரவு திருப்​தி​கர​மாக இருக்​கும். கொடுக்​கல் - வாங்​கலில் சுமுக​மான நிலை காணப்​படும். வியா​பாரத்​தில் புதிய வாடிக்​கை​யாளர்​களால் சரக்​கு​கள் விற்​றுத் தீரும். யாரை​யும் எடுத்​தெறிந்து பேசக் கூடாது.

சிம்​மம்: திடீர் வெளியூர் பயணம், அலைச்​சல், அசதி இருந்​தா​லும் முக்​கிய​மான வேலைகளை முடிப்​பீர்​கள். குடும்​பத்​தில் வீண் வாக்​கு​வாதம் தோன்றி மறை​யும். தொழில், வியா​பாரத்​தில் பங்​கு​தா​ரர்​களால் தேவையற்ற தொல்​லைகள் வந்து நீங்​கும்.

கன்னி: நீண்ட கால​மாக இழுபறி​யாக உள்ள பிரச்​சினை​களைக்கு நிரந்தர தீர்வு கிடைக்​கும். அதி​காரப் பதவி​யில் இருப்​பவர்​களின் அறி​முகம் கிடைக்​கும். எதிர்​பார்த்த இடத்​தில் இருந்து நல்ல செய்தி வரும். வியா​பாரத்​தில் லாபம் உண்​டாகும்.

துலாம்: விருந்​தினர்​கள், நண்​பர்​கள் வரு​கை​யால் வீட்​டில் மகிழ்ச்சி பொங்​கும். உடன்​பிறந்​தவர்​கள் உங்​கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்​வார்​கள். அதி​காரப் பதவி​யில் இருப்​பவர்​கள் தக்க சமயத்​தில் உதவு​வார்​கள். பேச்​சில் நிதானம் தேவை.

விருச்சிகம்: வெளி வட்​டாரத்​தில் புதி​ய​வர்​களின் நட்பு கிடைக்​கும். தள்​ளிப்​போன வழக்​கில் சாதக​மான திருப்​பம் வரும். அரசு, வங்கி காரி​யங்​கள் விரை​வாக முடி​யும். புதி​ய​வர்​களின் அறி​முக​மும், அதனால் ஆதாய​மும் கிடைக்​கும். பண வரவு உண்​டு.

தனுசு: மனதை வாட்​டிய பிரச்​சினை​கள் ஓயும். உங்​கள் சமயோசித​மான பேச்​சால், தடைபட்ட வேலைகளை முடிப்​பீர்​கள். குடும்​பத்​தில் குதூகலம் அதி​கரிக்​கும். பண வரவு, பொருள் வரவு உண்​டு. தொழில், வியா​பாரத்​தில் போட்​டிகள் நீங்​கும்.

மகரம்: பழு​தான மின்​சாதனங்​களை மாற்​று​வீர்​கள். பழைய கடனை அடைக்க புதிய வழி பிறக்​கும். கூட்​டுத் தொழிலில் பங்​கு​தா​ரர்​கள் ஆதர​வாக இருப்​பார்​கள். ஆன்​மிகம், தியானம், யோகா​வில் ஈடு​பாடு அதி​கரிக்​கும். பெரிய​வர்​களின் ஆசி கிடைக்​கும்.

கும்​பம்: தொட்ட காரி​யங்​கள் துலங்​கும். இடையூறுகள், தடைகள் நீங்​கும். இழுபறி​யாக இருந்த வேலைகள் முடி​யும். அரசு சம்​பந்​தப்​பட்ட காரி​யங்​கள் உடனடி​யாக நிறைவேறும். குலதெய்​வப் பிரார்த்​தனை​களை நல்​லபடி​யாக நிறைவேற்​று​வீர்​கள்.

மீனம்: அலைச்​சல், சோர்வு அதி​கரிக்​கும். குடும்​பத்​தில் விட்​டுக்​கொடுத்​துச் செல்​வது அவசி​யம். வி​யா​பாரத்​தில் போட்​டிகள் இருந்​தா​லும் சமாளிப்​பீர்​கள்​. எதி​லும்​ நிதானம்​ தேவை. வருங்​கால வளர்ச்​சிக்​காக சில முக்​கிய முடிவு​கள்​ எடுப்​பீர்​கள்​.

SCROLL FOR NEXT