மேஷம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர். பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். பிரபலங்கள் அறிமுகமாவர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். மேலதிகாரி பாராட்டுவார்.
ரிஷபம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவீர்கள். செலவை குறைக்கவும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையுண்டு. வியாபாரத்தில் பழைய சரக்கு விற்றுத் தீரும். புதிய பங்குதாரரின் ஆலோசனைகளை நிராகரிக்க வேண்டாம். அலுவலகப் பிரச்சினைகள் விலகும்.
மிதுனம்: எதிர்ப்புகளை தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் கூடும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். நவீன மின்சாதனப் பொருட்கள் வாங்குவீர். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
கடகம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக கொஞ்சம் அலைச்சலும் டென்ஷனும் இருக்கும். குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்துப் போகவும். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களைக் கவருவீர்.
சிம்மம்: தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை, வீண் சந்தேகம் விலகும். புது பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.
கன்னி: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வாகனத்தை சீர் செய்வீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.
துலாம்: பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
விருச்சிகம்: முன்கோபம் குறையும். பழைய நண்பர்கள் தேடி வருவர். குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். வாகனத்தை சரி செய்வீர். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர். அலுவலகத்தில் ஊழியர்களுடன் இணக்கமான போக்கை கடைபிடிப்பீர்.
தனுசு: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து நெருக்கம் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். உத்தியோகம் சிறக்கும்.
மகரம்: தம்பதிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். பூர்வீக வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர். அடுத்தவரைப் பற்றி குறை கூறுவதை நிறுத்தவும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது.
கும்பம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். யாருக்கும் எதற்காகவும் உறுதிமொழி அளிக்க வேண்டாம். பூர்வீக வீடு தொடர்பான வழக்கில் வெற்றி கிட்டும். வியாபார ரீதியாக பயணம் செல்வீர். அலுவலகத்தில் மதிப்புயரும்.
மீனம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். முன்கோபம் குறையும். முக்கிய பிரமுகர் அறிமுகமாவார். அலுவலகத்தில் அடுத்தவரைப் பற்றி குறை கூறாதீர். வியாபாரத்தை விரிவுபடுத்த முயல்வீர்.