மேஷம்: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் நல்ல விதத்தில் முடிவடையும். சொத்து தொடர்பான பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் சுமுகத் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். பால்ய நண்பரைச் சந்தித்து மகிழ்வீர்கள்.
ரிஷபம்: விலையுயர்ந்த கலைப்பொருட்கள், ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது யுக்தியைப் பயன்படுத்தி லாபத்தைப் பெறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள். திடீர் வெளியூர் பயணம் ஏற்படும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்: பழைய பொன், பொருளை மாற்றிவிட்டு புதியன வாங்கு வீர்கள். மனைவியின் சகோதரர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வியாபாரத்தில் வராது என்றிருந்த பணம் வந்துசேரும். பங்கு வர்த்த கத்தில் லாபம் கிடைக்கும். விருந்தினர் வருகை உண்டு.
கடகம்: எதிர்பார்த்த வேலைகள் மளமளவென்று முடியும். பிள்ளை களால் வெளிவட்டாரத்தில் மதிப்பு உண்டாகும். வீட்டை உங்கள் ரசனைக் கேற்ப விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். அண்டை அயலாருடன் இருந்துவந்த கருத்துமோதல் விலகும். வேலை தேடுவோருக்கு நல்ல தகவல் வரும்.
சிம்மம்: மனக்குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். சேமிக்கும் அளவுக்கு பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் காணப்படும். புது வாகனம் வாங்குவீர்கள். பூர்வீகச்சொத்து பிரச்சினை களில் நீடித்த சிக்கல் நீங்கி சுமுகத் தீர்வு கிடைக்கும்.
கன்னி: திடீர் யோகம் உண்டாகும். வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். உறவினர்கள் உங்களைப்பற்றி பெருமையாகப் பேசு வார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள்.
துலாம்: வீண் அலைச்சல், டென்ஷன் வரக்கூடும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வியாபாரத்தில் புது முடிவுகள் எடுக்க வேண்டாம். பயணங்கள் அலைச்சலைத் தரும். அடுத்தவர் விவகாரங்களில் அநாவசியமாகத் தலையிட வேண்டாம்.
விருச்சிகம்: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். மனைவி வழி உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். மூத்த சகோதரருடன் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். வியாபாரம் சுறுசுறுப்படையும். ஆன்மிகக் காரியங்களில் மனம் ஈடுபடும். திடீர் பயணம் ஏற்படும்.
தனுசு: தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். விருந்தினர், நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். வியாபாரத்தில் வராக்கடன்கள் வசூலாகும்.
மகரம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். தாயாரின் மருத்துவச் செலவு குறையும். உடன் பிறந்தோர் அனுசரணையுடன் நடந்துகொள்வார்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
கும்பம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து உடனுக் குடன் பூர்த்தி செய்வீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பிள்ளைகளின் கவனம் படிப்பில் திரும்பும். தந்தைவழியில் ஆறுதலான செய்தி வரும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.
மீனம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவது நல்லது. எதற் கெடுத்தாலும் மற்றவர்களை குறைசொல்ல வேண்டாம். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் இருக்கும். பிள்ளைகளால் எதிர்பாாரத செலவு ஏற்படும். வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் இருக்கும்.