இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 16 ஜூலை 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வேற்றுமொழி பேசுபவர்களால் நல்லது நடக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள். விரயச் செலவு குறையும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

ரிஷபம்: தடைபட்ட வேலைகளை மாறுபட்ட அணுகு முறையால் முடித்துக் காட்டுவீர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உறவினர்கள் தேடி வந்து பேசுவர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது. வியாபாரம் சிறக்கும்.

மிதுனம்: பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர். ஷேர் மூலம் பணம் வரும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பர். உயரதிகாரி பாராட்டுவார். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும். முக்கிய பதவிக்கு தேர்வு செய்யப்படுக்கப்படுவீர்.

கடகம்: முன்கோபத்தை தவிர்த்து அறிவுப்பூர்வமாக முடிவெடுப்பது நல்லது. குடும்பத்தில் நிம்மதியுண்டு. வாகனத்தால் கையிருப்பு கரையும். சிலர் புது வாகனம் வாங்குவீர். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் விவாதங்களைத் தவிர்த்துவிடவும்.

சிம்மம்: பொது விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். மனஇறுக்கம் நீங்கும். விஐபிகள் மத்தியில் செல்வாக்கு கூடும். பூர்வீக சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு.

கன்னி: உறவினர் மத்தியில் அந்தஸ்து உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். பால்ய நண்பர்களை சந்திப்பீர். சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும்.

துலாம்: புதியவர்களிடம் நிதானத்துடன் பழகுவது நல்லது. விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விண்ணப்பித்தவர்களுக்கு புது வேலை கிட்டும். வியாபாரரீதியாக சிலரை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.

விருச்சிகம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவர். அலுவலகத்தில் எதிலும் உங்கள் கை ஓங்கும்.

தனுசு: பொதுஅறிவை வளர்த்துக் கொள்வீர். நீண்டநாள் பிரச்சினை களுக்கு தீர்வு காண்பீர். யோகா, தியானத்தில் மனம் செல்லும். வீட்டுக்கு புதிய பொருட்கள் வந்து சேரும். அலுவலகரீதியான பயணங்கள் திருப்தி தரும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். திட்டமிட்ட வேலையை முடிக்க அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். பயணத்தின்போது கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.

கும்பம்: வேற்றுமொழி, மதத்தினரால் திருப்பம் உண்டு. குடும்பத்தி னரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். மேலதிகாரிகள் ஆதரிப்பர்.

மீனம்: பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகம் சிறக்கும்.

SCROLL FOR NEXT