மேஷம்: தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் கைகூடி வரும். ஓரளவு பணவரவு உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் தரும். உத்தியோகம் சிறக்கும்.
ரிஷபம்: நினைத்த காரியங்கள் நிறைவேறும். புது முயற்சிகளில் வெற்றி காண்பீர். கணவன்-மனைவிக்குள் இருந்த கசப்புகள் விலகும். அலைச்சல் குறையும். வியாபாரரீதியாக வெளியூர் பயணங்கள் செல்வீர்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
மிதுனம்: குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வெளிவட்டாரத்தில் பதவிகள் தேடி வரும். மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பர். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாண்டு அனைவரையும் கவர்வீர்.
கடகம்: குடும்பத்தில் கணவன் - மனைவிக்குள் மனம் விட்டுப் பேசி சின்னச் சின்ன கருத்து மோதல் வந்தாலும் சமாளிப்பீர். உடல் சோர்வு, அலைச்சல் வந்து போகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.
சிம்மம்: அடிப்படை வசதி பெருகும். பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். உறவினர், நண்பர் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிட்டும். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
கன்னி: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.
துலாம்: எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் மனப் பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்.
விருச்சிகம்: குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் நிம்மதி உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். ஆடம்பர செலவுகளை குறைத்து வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர். வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும்.
தனுசு: காரியத் தடைகள், அலைச்சல் வந்து போகும். விருந்தினர் வருகை, குடும்பத்தினரால் செலவு உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும். மேலதிகாரிகள் ஆதரிப்பர்.
மகரம்: தம்பதிக்குள் இருந்த சங்கடம் நீங்கி சந்தோஷம் வரும். குடும்ப வருமானத்தை பெருக்க வழி கிட்டும். நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார ரீதியாக பயணம் செல்வீர்கள். புதிய பங்குதாரர்களின் ஆலோசனையை நிராகரிக்காதீர். உத்தியோகம் சிறக்கும்.
கும்பம்: பழைய நல்ல நினைவுகளை நினைத்து அசை போடுவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்கள் உங்களிடம் அன்பாக இருப்பர். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிட்டும்.
மீனம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களை சாதிப்பீர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.