மேஷம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பல வகையிலும் சேமிப்புகள் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் திருப்தி தரும்.
ரிஷபம்: நீங்கள் ஏற்கெனவே செய்த உதவிக்கு இப்போது பாராட்டு கிடைக்கும். புதிய நண்பர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். உங்கள் உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து கூடும்.
மிதுனம்: பிரபலங்களின் உதவியை நாடிச் செல்வீர்கள். குடும்பத்தினரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அலுவலகப் பணிகளை விரைந்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.
கடகம்: பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டு.
சிம்மம்: சில வேலைகளை போராடி முடிக்கவேண்டி வரும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உடல் சோர்வு, வயிற்றுப் பிரச்சினைகள் வந்துபோகும். ஆன்மிகம், தியானத்தில் ஈடுபாடு ஏற்படும்.
கன்னி: உங்கள் பேச்சாற்றல், புத்திசாலித்தனம் வெளிப்படும். பணப் புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்களுடன் நட்பு மலரும். வீட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு, அமைதி, மகிழ்ச்சி நிலவும். பண வரவு திருப்தி தரும். ஆன்மிகத்தில் மனம் செல்லும்.
துலாம்: பழைய நண்பர்கள் தக்க சமயத்தில் ஓடிவந்து உதவுவார்கள். குடும்பத்தினரின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வராது என்று நினைத்த பழைய கடன் பாக்கிகள் கைக்கு வரும்.
விருச்சிகம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். அடிக்கடி தொந்தரவு கொடுத்த வாகனத்தை மாற்றுவீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.
தனுசு: தடுமாற்றம் நீங்கி, தெளிவு உண்டாகும். எடுத்த காரியங்களை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும். பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள்.
மகரம்: உங்கள் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். நண்பர்கள், உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பண வரவு உண்டு.
கும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். வீண், ஆடம்பரச் செலவுகளை கட்டுப்படுத்தி பணத்தை சேமிப்பீர்கள்.
மீனம்: சின்னச் சின்ன கவலைகள் வந்துபோகும். நீங்கள் ஒன்று பேச, மற்றவர்கள் வேறுவிதமாகப் புரிந்துகொள்வார்கள். யாரிடமும் பழைய சம்பவங்களைப் பேச வேண்டாம். வாகனப் பயணத்தில் நிதானம் தேவை. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.