மேஷம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர். புதியவர்களின் அறிமுகம் கிட்டும். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும். வியாபாரரீதியாக சில முடிவுகளை எடுப்பீர்.
ரிஷபம்: செலவுகளை குறைத்துக் கொண்டு சேமிப்பீர். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பர். சொந்த ஊர் விசேஷங்களுக்கு தலைமை தாங்குவீர். வியாபாரத்தில் போட்டிகளை தகர்ப்பீர். புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்.
மிதுனம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சிப்பீர். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பயணங்கள் அலைச்சல் தரும். வியாபாரத்தில் புது முடிவுகள் எடுக்க வேண்டாம். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.
கடகம்: ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். கடனாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வாகனப் பழுது நீங்கும். சிலர் புது வாகனம் வாங்குவீர். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும்.
சிம்மம்: கடந்தகால சுகமான அனுபவங்களை நினைத்து மனதில் சந்தோஷம் பொங்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். அலுவலக பணிகளை முடிப்பீர்கள். வியாபாரரீதியாக சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்.
கன்னி: குடும்பத்தில் நிலவிய காரசாரமான விவாதங்கள் மறையும். பிள்ளைகளின் சாதனைகளால் மதிப்புயரும். நல்லவர்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்காதீர்கள். அலுவலகத்தில் உயரதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவர்.
துலாம்: உடன் பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பர். பழைய சொத்து சிக்கலில் ஒன்று தீரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலக மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்.
விருச்சிகம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் இருக்கும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். பிள்ளைகளால் செலவு உண்டு. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.
தனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பர். எதிலும் கவனம் தேவை. அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரத்தில் அதிகம் உழைக்க வேண்டி வரும். அலைச்சல் இருக்கும். லாபம் கூடும்.
மகரம்: பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். சொந்த ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். மூத்த சகோதரிகள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
கும்பம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். தாய்வழி உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். வியாபா ரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவர்.
மீனம்: தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் கை கூடி வரும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் உண்டு. பிள்ளைகளுடன் சென்ற பயணங்கள் திருப்தி தரும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரம் லாபம் தரும்.