மேஷம்: பிள்ளைகளின் படிப்பு, வேலை தொடர்பாக அலைச்சல் இருக்கும். திட்டமிட்ட வேலையை முடிக்க போராடுவீர்கள். குடும்பத்தில் அனுசரித்து போகவும். வியாபாரத்தில் நிதானம் தேவை. பங்குதாரரை பகைத்து கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.
ரிஷபம்: வெளிவட்டாரத்தில் புதியவர் அறிமுகமாவார். ஈகோ பிரச்சினை தீர்ந்து கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர். வாகனப் பழுது நீங்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.
மிதுனம்: ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்க முயற்சிப்பீர். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை தகர்ப்பீர்கள். அலுவலக ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.
கடகம்: மனநிம்மதியுடன் காணப்படுவீர். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். தாயாரின் உடல்நலம் சீராக இருக்கும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் உண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர். வியாபாரத்தில் போட்டிகளை வெல்வீர்கள்.
சிம்மம்: புது சிந்தனைகள் பிறக்கும். மனதில் சந்தோஷம் உண்டு. பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர். வாகனத்தை சீர் செய்வீர்கள். அலுவலகப் பணிகளை திறம்பட முடிப்பீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களைக் கவருவீர்.
கன்னி: எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் பெரியவர்களின் அறிவுரையை ஏற்பது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகள் தேங்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
துலாம்: திட்டமிட்ட பணிகளை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க எண்ணுவீர்கள். வியாபாரத்தில் லாபமுண்டு. புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்க வேண்டாம். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.
விருச்சிகம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும். தாயாரின் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும். வியாபாரத்தில் பங்குதாரர்களை சமாளிப்பீர்.
தனுசு: எதிர்பார்த்து காத்திருந்த பணம் கைக்கு வரும். மனநிம்மதி கிட்டும். மனைவிவழியில் மதிப்பு உயரும். தாயாரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்த்துவிடவும். வியாபாரம் சூடு பிடித்து லாபமுண்டு.
மகரம்: சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். கவுரவப் பதவிகள் தேடி வரும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். கமிஷன் வகைகளால் பணம் வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.
கும்பம்: பழைய பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கையில் பணம் புரளும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். பணியாட்களின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.
மீனம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பதால் மனநிறைவு கிட்டும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். பங்குதாரரின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும்.