இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 06 ஜூன் 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவீர். நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படுவீர். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்: சவாலான காரியங்களை சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர்கள். தடைகள் யாவும் நீங்கும். முக்கிய முடிவுகள் எடுப்பீர். வியாபாரத்தில் போட்டி குறையும். லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

மிதுனம்: கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை உருவாகும். அலுவலகத்தில் மேலதி காரியின் ஆதரவு உண்டு. சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெல்வீர்.

கடகம்: குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர். தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பெறலாம்.

சிம்மம்: குடும்பத்தாரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்று வீர்கள். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். தாய்வழி சொந்தங்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கிட்டும்.

கன்னி: பேசாமல் இருந்த உறவினர் வந்து பேசுவார். குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் உங்கள் உதவியை நாடுவர். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

துலாம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் நீண்ட நாளாக இழுபறியாக இருந்த பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.

விருச்சிகம்: நெடுநாட்களாக இழுபறியாக இருந்த காரியம் முடிவுக்கு வரும். தாயாரின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும்.

தனுசு: மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடப்பார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் விதமாக வங்கி கடனுதவியை நாடுவீர்கள். அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர். மேலதிகாரி பாராட்டுவார்.

மகரம்: தவிர்க்க முடியாத செலவு, பயணங்கள் வரும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். உடன் பிறந்தவர்கள் ஆதரவுடன் பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். ஓரளவு லாபமுண்டு. உத்தியோகம் சிறக்கும்.

கும்பம்: மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பெரிய பதவியில் தொடர்பு கிடைக்கும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். வியாபாரத்தில் பங்குதாரர் ஆதரிப்பார்.

மீனம்: முகத்தில் தெளிவு பிறக்கும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர். பூர்வீக சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்க வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.

SCROLL FOR NEXT