மேஷம்: வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் தரும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும்.
ரிஷபம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். புது எலக்ட்ரானிக்ஸ் சாதனம் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மனநிம்மதி கிட்டும். வியாபாரத்தில் லாபமுண்டு. அலுவலகத்தில் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
மிதுனம்: தம்பதிக்குள் கருத்துமோதல் வரலாம். திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். உடன்பிறந்தவர் ஆதரவுடன் பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்துவீர். வியாபாரத்தில் பணம் வரும். அலுவலகத்தில் பணிச் சுமை கூடும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்.
கடகம்: உறவினர்களின் அன்புத் தொல்லை உண்டு. சிக்கனமாக இருக்க நினைத்தாலும், அத்தியாவசிய செலவு அதிகரிக்கும். வாகனத்தில் இருந்த பழுது நீங்கும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் தரும். அலுவலக ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.
சிம்மம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். தங்கம், வெள்ளி ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்துவீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் கிட்டும். அலுவலகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்.
கன்னி: குடும்ப உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் ஒத்துழைப்பர். நண்பர்கள் உங்களை புரிந்து கொள்வர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்கள் ஆதரிப்பர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
துலாம்: எதிர்பாராத பணவரவால் கடனை பைசல் செய்வீர். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றும். பிள்ளைகள் பொறுப்பாக செயல்படுவர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர்.
விருச்சிகம்: கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். சகோதர வகையில் இருந்த அலைச்சல் விலகும். புது வேலை அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். பங்குதாரர்கள் ஆதரவு தருவார்கள். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்.
தனுசு: அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வீண் செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். சக ஊழியர்களைப் பற்றி தலைமையிடத்தில் புகார் கூறுவதை தவிர்ப்பீர்.
மகரம்: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். அரசு வேலைகள் முடிவுக்கு வரும். அலுவலக ரீதியாக இருந்த குழப்பங்கள் தீர்ந்து நிம்மதி பிறக்கும்.
கும்பம்: வாகனத்தை சீர் செய்வீர். குடும்பத்தில் உங்கள் ஆலோசனை ஏற்கப்படும். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். வியாபார போட்டிகளை எளிதாக சமாளிப்பீர். பங்குதாரர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிப்பீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.
மீனம்: தம்பதிக்குள் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். வங்கியில் கேட்ட கடனுதவி கிடைக்கும். சொந்த ஊர் பயணம் உற்சாகம் தரும். வியாபாரத்தில் பிரபலங்களை சந்திப்பீர். பணியாளர்களிடம் கனிவாக பேசுவது நல்லது. அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.