மேஷம்: காரியத் தடை, அலைச்சல் ஏற்படும். மனைவி வழியில் ஒத்துழைப்பு உண்டு. அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் போட்டி இருக்கும். பயணங்களில் கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்: புதியவர்கள் அறிமுகமாவர். வர வேண்டிய பணம் கைக்கு வரும். செலவுகளைக் குறைத்து வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர். வழக்குகள் சாதகமாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர். பெரிய மனிதர், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.
கடகம்: மனக்குழப்பம் நீங்கி நிம்மதியுடன் இருப்பீர். திட்டமிட்ட வேலைகளில் வெற்றி கிட்டும். தாய்வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.
சிம்மம்: வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். தொழிலில் போட்டி குறையும். பங்குதாரர்கள் ஆதரவு தருவர். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர்.
கன்னி: பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்களின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்த வேண்டாம். அலுவலகத்தில் மேலதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவர்.
துலாம்: முன்கோபத்தை குறைப்பது நல்லது. மகளின் திருமணம், மகனின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்று அலைச்சல் இருக்கும். தாயாரின் உடல்நிலை லேசாக பாதிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
விருச்சிகம்: மகிழ்ச்சியுடன் காணப்படுவீர். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்களில் வெற்றி காண்பீர். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். வியாபாரத்தில் உள்ள நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர். பங்குதாரரின் ஆலோசனையை ஏற்பீர்.
தனுசு: சொந்த பந்தங்களிடையே மதிப்பு, மரியாதை கூடும். தந்தை வழி சொத்துகள் கைக்கு வரக்கூடும். மூத்த சகோதர சகோதரிகள் பண உதவி செய்வார்கள். வாகனப் பழுது நீங்கும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்.
மகரம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராக பேசி காரியம் சாதிப்பீர். சேமிக்கும் அளவுக்கு வருவாய் கூடும். பழுதான சாதனங்களை மாற்றுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். தேங்கிய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
கும்பம்: எதிர்பார்த்துக் காத்திருந்த பணம் கையில் வந்து சேரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். பூர்வீக வீடு, மனை, நிலங்களை நல்ல விலைக்கு விற்று விட்டு வேறு ஊருக்கு குடிபுகுவீர். அலுவலகத்தில் உங்களின் தரம் ஒருபடி உயரும். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்.
மீனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். பிள்ளைகள் பொறுப்பு அறிந்து செயல் படுவதால் மன நிம்மதியுண்டு. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் யாரைப்பற்றியும் புகார் கூற வேண்டாம்.