இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 20 மே 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். முகப் பொலிவுடன் காணப்படுவீர். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது சரக்குகள் வந்திறங்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும்.

ரிஷபம்: குற்றம் குறை கூறியவர்கள் இனி வலிய வந்து பேசுவார்கள். வீட்டில் நல்லது நடக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் மதிப்பு உயரும். உயரதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவர்.

மிதுனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பிள்ளைகளின் நடவடிக்கையை கவனிக்கவும். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் கவனம் தேவை. பங்குதாரர்களின் கருத்தை கேட்கவும். அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் விவாதிக்காதீர்.

கடகம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டு. ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பிள்ளைகளின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

சிம்மம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவு படுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவர். அலுவலக ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

கன்னி: முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிட்டும். பூர்வீக வீடு, நிலம் தொடர்பான வழக்கில் வெற்றி கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடன் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களின் கோரிக்கை ஏற்கப்படும். பொறுப்பு கூடும்.

துலாம்: மனக் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். மனைவி, தாயாரின் மருத்துவ செலவுகள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவி கிட்டும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்புண்டு.

விருச்சிகம்: குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். தொழில்ரீதியாக சில பிரபலங்களை சந்திப்பீர். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்காதீர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆதரவு தருவார்கள்.

தனுசு: பழைய சொத்துப் பிரச்சினைகளை இப்போது கையிலெடுக்காதீர்கள். குடும்பத்தில் குழப்பங்கள் வரும். நண்பர்கள் உங்களை உதாசீனப்படுத்துவர். எதிலும் நிதானமாக செயல்படவும். வியாபாரத்தில் கனிவாகப் பேசவும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

மகரம்: விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர். நண்பர்களின் உதவி கிட்டும். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.

கும்பம்: மனக் குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர். கருத்துமோதல் தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பணவரவால் நிம்மதியுண்டு. வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். உத்தியோகம் சிறக்கும்.

மீனம்: எதிர்பாராத பயணங்களால் ஆதாயம் உண்டு. முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிட்டும். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். அரசு காரியம் முடியும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

SCROLL FOR NEXT