மேஷம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர். பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்கள் வார்த்தைக்கு மரியாதை கூடும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் தரும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
ரிஷபம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சி மேற்கொள்வீர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.
மிதுனம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனபராமரிப்புச் செலவுகள் கூடும். நவீன சாதனங்கள் வாங்குவீர். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர்.
கடகம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வாகனத்தை சீர் செய்வீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் ஆலோசனையை நிராகரிக்காதீர். உத்தியோகம் சிறக்கும்.
சிம்மம்: எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் விவாதங்கள் வரும். பிள்ளைகளின் உடல் நிலை சீராகும். பூர்வீக வீட்டை
சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
கன்னி: குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதம் வந்து போகும். வாகனத்தை சரி செய்வீர். உறவினர்கள், பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் அனைவரையும் அரவணைத்து செல்வது நன்மை தரும். வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வீர். லாபமுண்டு.
துலாம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர். தம்பதிக்குள் ஈகோ பிரச்சினை தீர்ந்து நெருக்கம் கூடும். வருங்காலத்துக்கான முக்கியமுடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு. வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்.
விருச்சிகம்: தம்பதிக்குள் இருந்த கருத்து மோதல், வீண் சந்தேகம் விலகும். பூர்வீக வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புது பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். உத்தியோகத்தில் உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுவீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும்.
தனுசு: அரசால் அனுகூலம் உண்டு. பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையடைவீர்கள். பூர்வீக சொத்து வழக்கில் வெற்றி பெறுவீர். தம்பதிக்குள் மனம் விட்டு பேசுவது நல்லது. வியாபார நுணுக்கங்களை, நெளிவு சுளிவுகளை அறிந்து கொள்வீர். உத்தியோகம் சிறக்கும்.
மகரம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். முன்கோபம் குறையும். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும். மேலதிகாரி பாராட்டுவார்.
கும்பம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், டென்ஷன் கூடும். குடும்பத்தாருடன் மனக்கசப்புகள் வரலாம். எதிலும் நிதானம் அவசியம். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். அலுவலகத்தில் நற்பெயர் கிட்டும். வியாபாரத்தில் முக்கிய முடிவுகளை தாமதப்படுத்தவும்.
மீனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவீர். வீண் செலவுகளை குறைப்பது நல்லது. வெளிவட்டாரத்தில் பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை உண்டு. அலுவலக பிரச்சினை தீரும். மேலதிகாரிகள் ஆதரவு தருவார்கள். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும்.