இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 09 மே 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: முன்கோபத்தை தவிர்த்து அறிவுப்பூர்வமாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர். தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் போக்கில் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

ரிஷபம்: தடைபட்டவேலைகளை மாறுபட்ட அணுகு முறையால் முடித்துக் காட்டுவீர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவர். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்த்துவிடவும்.

மிதுனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போகவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். சிலர் பழைய சம்பவங்களை பேசி மனதை காயப்படுத்துவர். வியாபாரத்தில் அலைந்து திரிந்து லாபம் ஈட்டுவீர்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

கடகம்: உறவினர் மத்தியில் அந்தஸ்து உயரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர். முக்கிய பிரமுகர்களின் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். மேலதிகாரிகள் பாராட்டுவார்கள்.

சிம்மம்: மனஇறுக்கம் நீங்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிட்டும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவர். வியாபார ரீதியாக சிலரை சந்திப்பீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

கன்னி: வேற்றுமொழி, மதத்தினர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் பார்க்கலாம். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்களை அனுசரித்து நடக்கவும்.

துலாம்: பிரபலங்களுக்கு நெருக்கமாவீர். பூர்வீக சொத்து வழக்கில் வெல்வீர். ஷேர் மூலம் பணம் வரும். முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர். உத்தியோகம் சிறக்கும். சக ஊழியர்கள் மதிப்பர். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்.

விருச்சிகம்: பணவரவு உண்டு. நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

தனுசு: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். யோகா, தியானத்தில் மனம் செல்லும். பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். அலுவலகரீதியான பயணம் திருப்தி தரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வெல்வீர்.

மகரம்: முன்கோபம் கூடும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

கும்பம்: பூர்வீக வீடு, நில பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும். தடைபட்ட வேலைகள் முடியும். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். வியாபார நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர். பங்குதாரர்கள் ஆதரவு தருவார்கள்.

மீனம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

SCROLL FOR NEXT