மேஷம்: பேச்சில் கவனம் தேவை. முடிவெடுப்பதில் தடுமாற்றம் வரும். குடும்பத்தினரின் ஆலோசனையை கேட்டு நடக்கவும். செலவுகளை குறைப்பது நல்லது. வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.
ரிஷபம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பர். யோகா, ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர். வியாபாரத்தில் பங்குதாரரின் கருத்துகளை கேட்கவும்.
மிதுனம்: மனதில் இருந்த பயம் விலகும். பணவரவு திருப்தி தரும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெல்வீர்.
கடகம்: சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பித் தருவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நன்மை தரும்.
சிம்மம்: சகோதர வகையில் உதவி கிட்டும். விரும்பிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பீர்.
கன்னி: எதிர்பாராத பணவரவால் மனமகிழ்ச்சி உண்டு. உறவினர், நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள். பங்குதாரர்கள் தக்க ஆலோசனை வழங்குவர். உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.
துலாம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல், செலவு இருக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரத்தில் போட்டி இருக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
விருச்சிகம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர். அக்கம் பக்கத்தினரை பகைத்து கொள்ள வேண்டாம். மனதுக்கு பிடித்தமானவர்களை சந்திப்பீர். அலுவலக பணிகளை விரைந்து முடிப்பீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.
தனுசு: பழைய நினைவுகளில் மூழ்குவீர். பிள்ளைகளால் பெருமையடைவீர். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும்.
மகரம்: மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. வியாபார ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
கும்பம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். பொறுப்பு கூடும்.
மீனம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர், நண்பர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.