மேஷம்: குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வாகனத்தை மாற்றுவீர். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.
ரிஷபம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர். உறவினர்கள் உங்களை பெருமையாக பார்ப்பார்கள். சொந்த ஊர் நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குவீர்கள். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
மிதுனம்: நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய நண்பர்கள் வீடு தேடி வருவர். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். உத்தியோகம் சிறக்கும்.
கடகம்: மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களின் செயலை பார்த்து மற்றவர்கள் வியப்பர். குடும்பத்தில் நிம்மதி தங்கும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றி பெறுவீர். வேறு இடத்துக்கு கடையை மாற்றுவீர்.
சிம்மம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர், பணியாட்களின் ஆதரவு கிடைக்கும்.
கன்னி: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். கையிருப்பு கரையக் கூடும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளவும். வாகனத்தில் நிதானம் தேவை. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்த்துவிடவும்.
துலாம்: புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். குலதெய்வப் பிரார்த்தனை நிம்மதி தரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்காதீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.
விருச்சிகம்: எதிர்பார்த்த பணிகள் தடையின்றி முடியும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர்கள் உதவி நாடி வருவர். வியாபாரத்தில் பங்குதாரர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். அலுவலகத்தில் நிம்மதியுண்டு.
தனுசு: உடன்பிறந்தவர்களால் ஆதாயமுண்டு. பேச்சில் தெளிவு பிறக்கும். முரண்டு பிடித்த பிள்ளைகள் சொல் பேச்சு கேட்பார்கள். தாயாரின் உடல்நலம் நிம்மதி தரும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
மகரம்: உங்களின் அணுகுமுறையை மாற்றி தடைபட்ட வேலையை முடிப்பீர்கள். சகோதரியின் விசேஷத்துக்கு அதிகம் உழைப்பீர். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்.
கும்பம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், செலவு இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உடல்நலத்தில் அக்கறை செலுத்தவும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். பொறுப்புகள் கூடும்.
மீனம்: தெளிவாக பேசி சில வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வங்கியில் வாங்கிய கடனை பைசல் செய்வீர்கள். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி கிட்டும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம்.