மேஷம்: சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை உயரும். கவுரவப் பதவிகள் தேடி வரும். சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பங்குச் சந்தை, கமிஷன் வகைகளால் ஆதாயம், பண வரவு உண்டு. ஆன்மிகம், யோகா, தியானத்தில் ஈடுபாடு ஏற்படும்.
ரிஷபம்: வெளி வட்டாரத்தில் புதிய நண்பர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாகக் கொடுத்த பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வாகனப் பழுது நீங்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.
மிதுனம்: கடந்தகால சுகமான அனுபவங்களை நினைத்துப் பார்த்து மகிழ்வீர்கள். பழுதான வீடு, வாகனத்தை சரிசெய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். அலுவலகப் பணிகளை விரைந்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பொருட்கள் சேரும்.
கடகம்: எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் நீங்கும். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். தாய்வழி சொந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகளைத் தகர்ப்பீர்கள். பேச்சில் பொறுமை தேவை.
சிம்மம்: திடீர் வெளியூர் பயணம், அலைச்சல், அசதி, தேவையற்ற செலவுகள் இருக்கும். எடுத்த வேலை முடியவில்லையே என்று வேதனைப்படுவீர்கள். பிள்ளைகளிடம் கனிவாகப் பேசுங்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
கன்னி: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவார்கள். நாடி வந்தவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்வீர்கள்.
துலாம்: இழுபறியாக உள்ள பழைய பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் மறைந்து, அன்யோன்யம் பிறக்கும். கையில் காசு பணம் புரளும். வியாபாரத்தில் போட்டிகள் மறையும். ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
விருச்சிகம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு, அந்தஸ்து உயரும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும். பெற்றோர் உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களை பேசி சமாளிப்பீர்கள். எக்காரியத்திலும் நிதானம் தேவை.
தனுசு: எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதால் மனநிம்மதி, மகிழ்ச்சி கிடைக்கும். மனைவி வழியில் அந்தஸ்து உயரும். பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பெரியவர்கள், மகான்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள்.
மகரம்: எக்காரியத்திலும் நிதானமாக செயல்படுங்கள். குடும்பத்தில் மூத்தவர்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பது நல்லது. வாகனப் பயணத்தின்போது அதிக கவனம் தேவை. வியாபாரத்தில் சரக்குகள் தேங்கும். புதிய முடிவுகள் எடுக்கும் முன்பு யோசித்து செயல்படுங்கள்.
கும்பம்: குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். பண வரவு, பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும். வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல் வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும்.
மீனம்: எல்லா வகையிலும் வெற்றி கிடைக்கும். எதிரிகள் கனிவாகப் பேசி சமாதானத்துக்கு வருவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நல்ல செய்திகள் வரும். பழுதான வாகனத்தை மாற்றி, புதிதாக வாங்குவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினை தீரும்.