மேஷம்: திடீர் திருப்பம் உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். முன்கோபம் குறையும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
ரிஷபம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிவீர். அரசால் அனுகூலம் உண்டு. அலுவலகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்கள்.
மிதுனம்: கணவன் - மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி அன்யோன்யம் கூடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் தரும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்த்துவிடவும்.
கடகம்: திடீர் பயணம் அலைச்சல் தரும். திட்டமிட்ட வேலையை முடிக்க போராடுவீர்கள். முன்கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்காதீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
சிம்மம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். வாகனப் பழுது நீங்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர். வியாபாரத்தில் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி உண்டு.
கன்னி: குடும்பத்தினரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். கையில் பணம் புரளும். விஐபிகளை சந்திப்பதால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகப் பிரச்சினை விலகும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.
துலாம்: சொந்த ஊர் கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்து வீர்கள். தம்பதிக்குள் நெருக்கம் உண்டாகும். உடல்நலம் சீராகும். பணவரவு திருப்தி தரும். அரசாங்க அதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர்கள்.
விருச்சிகம்: சவாலான விஷயங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். திடீர் பயணங்கள் உண்டு. பழைய நண்பர்கள், உறவினர்களை சந்திப்பீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.
தனுசு: பேச்சில் நிதானம் தேவை. கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரத்தில் போட்டிகள் கூடும். புதிய பங்குதாரர்களை அனுசரித்து நடக்கவும். அலுவலகத்தில் யாரிடமும் விவாதம் செய்யாதீர்கள். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
மகரம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். கணவன்-மனைவிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.
கும்பம்: எதையும் தாங்கும் மனவலிமை பெறுவீர்கள். எதிர்ப்பு, ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர். பணவரவு உண்டு. சகோதரர்கள் பக்கபலமாக இருப்பர். கூட்டுத்தொழிலில் போட்டி குறையும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். பொறுப்பு கூடும்.
மீனம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். மனைவிவழி உறவினருடன் இருந்துவந்த கருத்து மோதல் நீங்கும். வியாபாரத்தில் பணியாட்கள் ஆதரவு தருவர். அலுவலகத்தில் தேடிய ஆவணங்கள் தென்படும். மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும்.