மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவர். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். வியாபார சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர். அலுவலகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்.
ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். அரசாங்க அதிகாரிகளை சந்திப்பீர். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
மிதுனம்: இங்கிதமாகப் பேசுவது நல்லது. தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் பணியாட்களின் தொந்தரவு வரக் கூடும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
கடகம்: குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படவும். அலுவலகத்தில் முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்.
சிம்மம்: குடும்ப உறுப்பினர்கள் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பர். பிள்ளைகளால் பெருமையடைவீர். உடன்பிறந்தோரின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் பணியாட்களின் தொந்தரவு விலகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். மேலதிகாரிகள் ஆதரவு தருவர்.
கன்னி: புது கருத்துகளால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். பணவரவு உண்டு. தம்பதிக்குள் நெருக்கம் கூடும். முன்கோபம் குறையும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
துலாம்: நீண்ட நாள் கனவுகள் நனவாகும். சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். முகமலர்ச்சியுடன் காணப்படுவீர். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். தந்தையின் உடல்நிலை சீராகும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
விருச்சிகம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக செலவு, அலைச்சல் இருக்கும். குடும்பத்தினரின் விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். தாயாரின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் அவசர முடிவுகளை எடுக்காதீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
தனுசு: அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிட்டும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர். புது பொறுப்பு, பதவி தேடி வரும். உறவினர், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பர். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.
மகரம்: குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். உங்கள் உழைப்புக்கு பாராட்டு கிட்டும். பூர்வீக சொத்து பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும். வியாபார நுணுக்கங்களை கற்று கொள்வீர்.
கும்பம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மனநிறைவு கிட்டும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். மாணவர்களின் கனவு நினைவாகும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.
மீனம்: சொந்த ஊரிலிருந்து நல்ல செய்திகள் தேடி வரும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த பகை நீங்கும். புதிய வாகனம் வாங்குவீர். தாயாரின் உடல்நிலை சீராகும். அலுவலகத்தில் தடைபட்ட பணிகள் முடியும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களை ஏற்றுக் கொள்வீர்.