இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 19 ஏப்ரல் 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பழைய நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்று நட்பை புதுப்பிப்பீர். வாகனத்தை சீர் செய்வீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும்.

ரிஷபம்: குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். திட்டமிட்ட பணியை அலைந்து திரிந்து முடிப்பீர். கூட்டுத்தொழிலில் ஓரளவு லாபமுண்டு. புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்று நடக்கவும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்: எதார்த்தமான பேச்சால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர். தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

கடகம்: நீண்ட நாளாக அடைக்க முடியாமல் இருந்த கடனை இப்போது அடைக்கும் அளவுக்கு பணம் வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். அலுவலகத்தில் பணிச் சுமை குறையும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும்.

சிம்மம்: உறவினர்கள் உங்கள் வீடு தேடி வந்து பேசுவர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களுடன் சென்று குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.

கன்னி: நீண்டநாள் கனவுகள் நனவாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும்,உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் நிம்மதியுண்டு. பங்குதாரர்கள் ஆதரவு தருவர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

துலாம்: கணவன் மனைவி விஷயத்தில் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். குடும்பத்தில் கவனமாக பேசவும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்கள்.

விருச்சிகம்: பணவரவு உண்டு. உங்களுடன் உறவாடிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். வியாபாரரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் இணக்கமாக செயல்படுவது நல்லது.

தனுசு: தடைகள் உடைபடும். கணவன் - மனைவிக்குள் இருந்த பனிப்போர் விலகும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

மகரம்: புதிய சிந்தனையால் பிரச்சினைகளை முடிப்பீர். பூர்வீக சொத்து விவகாரம் முடிவுக்கு வரும். உறவினர், நண்பர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.

கும்பம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர். குடும்பத்தினரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் இருக்கும். அலுவலகத்தில் முக்கிய பொறுப்புகள் உங்களிடம் ஒப்படைக்கப்படும். வியாபாரம் சிறக்கும்.

மீனம்: நீண்ட நாட்களாக தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடி வரும். பிள்ளைகள் மனம் விட்டுப் பேசுவர். பண விஷயத்தில் கறாராக இருப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும்.

SCROLL FOR NEXT