மேஷம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், செலவு இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பூர்வீக வீடு, நிலம் நல்ல விலைக்கு விற்பனையாகும். வியாபாரத்தில் சரக்குகளை போராடி விற்பீர்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
ரிஷபம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீர்ந்து, நெருக்கம் அதிகமாகும். பழைய ஃபேன், பிரிட்ஜை மாற்றுவீர்கள். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது.
மிதுனம்: குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் விலகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகள் படிப்பு, தாயாரின் மருத்துவம் என்று செலவுகளும் இருக்கும். வியாபாரத்தில் நிம்மதி தரும். அலுவலகத்தில் மதிப்பு உயரும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
கடகம்: தாழ்வு மனப்பான்மை நீங்கும். செலவுகளை தவிர்க்கவும். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குழந்தைகளிடம் முன்கோபத்தை காட்ட வேண்டாம். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரத்தில் தேங்கிய சரக்குகள் விற்றுத் தீரும்.
சிம்மம்: உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். திட்டமிட்ட வேலையை திறம்பட செய்து முடிப்பீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
கன்னி: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். மகளுக்கு நல்ல வரன்அமையும். மகனுக்கு பெரிய நிறுவனத்தில் பணி கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. புதிய பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படவும். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
துலாம்: சோர்வு நீங்கி முகமலர்ச்சியுடன் காணப்படுவீர். விவாதங்களை தவிர்க்கவும். ஆடை, ஆபரணம் சேரும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் மேலதிகாரி மதிப்பார். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்கள்.
விருச்சிகம்: பழைய நண்பர்கள் வருவர். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. புதிய இடத்துக்கு கடையைமாற்றுவீர். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடப்பீர்.
தனுசு: கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வயிற்றுவலி, மூக்கடைப்பு நீங்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
மகரம்: பழைய வழக்குகளை இப்போது பேசித் தீர்ப்பீர். பணவரவால் மனநிம்மதியுண்டு. பூர்வீக வீடு, நிலம் தொடர்பான பிரச்சினை முடிவுக்கு வரும். அலுவலகத்தில் தொல்லை தந்த அதிகாரி ஆதரவு தருவார். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முற்படுவீர்.
கும்பம்: இழுபறியாக இருந்த பணிகள் நிறைவுபெறும். தந்தை யாருடன் இருந்து வந்த பனிப்போர் விலகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். மேலதிகாரி பாராட்டுவார்.
மீனம்: தள்ளிப் போய் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிக்கு நாள் குறிப்பீர். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளிடம் முன்கோபத்தை காட்ட வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.