மேஷம்: புது திட்டங்கள் தீட்டுவீர். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். தாயாரின் மருத்துவச் செலவுகள் குறையும். வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும்.
ரிஷபம்: வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் நீங்கும். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர். பங்குதாரர் ஆதரவு தருவார். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
மிதுனம்: பிள்ளைகளின் விருப்பத்தை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். பூர்வீக சொத்து பிரச்சினையை பேசித் தீர்ப்பீர்கள். மூத்த சகோதரர் உதவுவார். அலுவலகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர். வியாபார ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.
கடகம்: இங்கிதமாகப் பேசி சுற்றியிருப்பவர்களை அசத்துவீர். தாயார், பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது.
சிம்மம்: எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட இழுபறியாகும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் சிக்கல்கள் வரலாம். புதிய பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படவும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்த்துவிடுங்கள்.
கன்னி: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்பட்டு முக்கிய வேலைகளை முடிப்பீர்கள். சொந்த ஊரிலிருந்து நற்செய்தி வரும். குழப்பங்கள் தீர்ந்து அலுவலகத்தில் நிம்மதி கிட்டும். மேலதிகாரிகள் பாராட்டுவர். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கிகள் வசூலாகும்.
துலாம்: குடும்பத்தினரின் விருப்பங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். தந்தைவழியில் இருந்த மனஸ்தாபம் விலகும். அலுவலகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பர். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.
விருச்சிகம்: விலையுயர்ந்த அலங்காரப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபார போட்டிகள் விலகும். புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரவு தருவார்.
தனுசு: கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். புதியவர்கள் நண்பர்களாவர். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்களால் சரக்குகள் விற்றுத் தீரும்.
மகரம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்களை கண்டறிவீர்கள். திட்டமிட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரியுடன் இருந்த பனிப்போர் விலகும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர்.
கும்பம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள். பொறுப்புகள் கூடும்.
மீனம்: மனக்குழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள். தாயாரின் மருத்துவ செலவு கூடும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.