இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 11 ஏப்ரல் 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். தம்பதிக்குள் இருந்த பனிப்போர் மறையும். பழைய ஃபேன், பிரிட்ஜை மாற்றுவீர். அலுவலகத்தில் மதிப்பு கூடும். மேலதிகாரியின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு எதிலும் வெற்றி பெறுவீர்.

ரிஷபம்: குடும்பத்தில் குழப்பம் நீங்கும். பணவரவு உண்டு. முன்கோபத்தை தவிர்ப்பீர். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர். பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்காதீர்கள். அலுவலகத்தில் மகிழ்ச்சியுண்டு.

          

மிதுனம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், செலவுகள் வரலாம். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். உடன் பிறந்தவர்கள் உங்கள் நிலைமையை புரிந்து கொள்வர். வியாபாரத்தில் சரக்குகளை போராடி விற்பீர்கள். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

கடகம்: கூடுதலான பணவரவால் வீட்டிலுள்ள பழைய பொருட்களை மாற்றுவீர். அலுவலகத்தில் உயரதிகாரி பாராட்டும்விதமாக நடப்பீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்களை அனுசரித்து நடக்கவும். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அறிவிப்பீர்.

சிம்மம்: திட்டமிட்ட வேலையை திறம்பட செய்து முடிப்பீர். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உதவி செய்வர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது.

கன்னி: கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வயிற்றுவலி, மூக்கடைப்பு நீங்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பர். அலுவலகத்தில் தேடிய ஆவணம் கிட்டும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள்.

துலாம்: குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் விலகும். பணவரவு திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர். யாருக்கும் எந்த விதத்திலும் உறுதிமொழி தர வேண்டாம். எதிலும் எச்சரிக்கை அவசியம். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

விருச்சிகம்: பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.

தனுசு: பழைய வழக்குகளை இப்போது பேசித் தீர்ப்பீர். பணவரவால் மனநிம்மதியுண்டு. வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த முற்படுவீர்கள். அலுவலகத்தில் தொல்லை தந்த அதிகாரி இனி பணிவார். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும்.

மகரம்: தம்பதிக்குள் சின்னச் சின்ன கருத்துமோதல் வரக்கூடும். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பீர்கள். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படவும். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.

கும்பம்: குழப்பம் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர். குடும்பத்தில் நிலவிய கருத்துமோதல் விலகும். ஆடை, ஆபரணம் சேரும். உடன்பிறந்தவர்களின் ஆதரவுண்டு. வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரி மதிப்பார். புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்.

மீனம்: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தந்தையாருடன் இருந்த கருத்துமோதல் விலகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் புகார் கூறுவதை தவிர்க்கவும்.

SCROLL FOR NEXT