இன்றைய ராசிபலன்

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

செய்திப்பிரிவு

மேஷம்: சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அரசாங்க காரியங்களில் இருந்துவந்த பின்னடைவு நீங்கும்.

ரிஷபம்: முன்கோபம், டென்ஷன் விலகும். காரியங்களை முடிக்க முடியாமல் அவதிப்பட்ட நிலை மாறும். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும். வாகனம் செலவு வைக்கும்.

மிதுனம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் கவருவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

கடகம்: எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படுவதை நிறுத்துங்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகூட பெரிய தகராறில் போய் முடியும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துங்கள்.

சிம்மம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளின் உடல் நிலை சீராக இருக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். சகோதரர் வகையில் உதவி கிடைக்கும்.

கன்னி: அடிமனதில் நிலவிய பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

துலாம்: உங்களின் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் தேவையை அறிந்து உதவுவீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

விருச்சிகம்: குடும்பத்தில் குதூகலமான சூழல் காணப்படும். பிள்ளைகளின் கோபம், அலட்சியப் போக்கு மாறும். பழைய இனிய சம்பவங்களை அடிக்கடி நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள்.

தனுசு: எடுத்த வேலையை எவ்விதத் தடையும் இன்றி முடிப்பீர்கள். மறைமுகப் போட்டிகளை சமாளித்து விடுவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். திடீர் பயணம் ஏற்படலாம்.

மகரம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்: நண்பர்கள், உறவினர்களுடன் வரம்புமீறிப் பேசி சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள்.

மீனம்: ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்கக் கூடும். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வெளிவட்டாரத்தில் நிதானமுடன் செயல்படுங்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT