மேஷம்
குடும்பத்தில் அநாவசியப் பேச்சு, வீண் வாக்குவாதம் வேண்டாம். சிலரது தவறான போக்கை எண்ணி வருந்துவீர்கள். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
ரிஷபம்
பழைய நண்பர்கள் தொடர்புகொண்டு மனம்விட்டுப் பேசுவார்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் கூடும். ஏழைகள், இல்லாதோருக்கு உதவி செய்வீர்கள்.
மிதுனம்
பழைய கடன் பிரச்சினைகள் தீரும். குழந்தைகளின் தனித் திறமைகளை கண்டறிந்து உற்சாகப்படுத்துவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.
கடகம்
வருங்கால வளர்ச்சிக்கு திட்டம் தீட்டுவீர்கள். குடும்பத்தில் மரியாதை உயரும். கோபத்தைக் கட்டுப்படுத்துவது அவசியம். ஆன்மிகம், தியானத்தில் நாட்டம் ஏற்படும்.
சிம்மம்
பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிடுவதால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பணவரவு, பொருள் வரவு உண்டு. சகோதர உறவுகள் ஆதரவாக இருப்பார்கள்.
கன்னி
அசதி, களைப்பு நீங்கி, உற்சாகமும், சுறுசுறுப்பும் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த சேதி வந்து சேரும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.
துலாம்
கணவன் - மனைவிக்குள் பனிப்போர் நீங்கி, அன்யோன்யம் பிறக்கும். குடும்பத்தினரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள், மருத்துவச் செலவுகள் குறையும்.
விருச்சிகம்
செலவுகளைக் குறைத்து, சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். பழைய சம்பவங்களை நினைத்துப்பார்த்து மகிழ்வீர்கள்.
தனுசு
விலகிச் சென்ற நண்பர்கள், உறவினர்கள் தங்கள் தவறை உணர்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் அதிகரிக்கும்.
மகரம்
கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். தாய் வழி உறவினர்களால் ஆதாயம், நன்மை உண்டு. ஆதரவற்றோர், ஏழைகளுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்வீர்கள்.
கும்பம்
வெளிநாடு, வெளி மாநிலத்தில் இருந்து நல்ல சேதி வரும். எதிலும் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்காமல், சிந்தித்து செயல்படுவது நல்லது. மன நிம்மதி உண்டாகும்.
மீனம்
இனம்புரியாத அச்சம், கவலை நீங்கி நம்பிக்கையும், உற்சாகமும் பிறக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். எக்காரியத்திலும் நிதானம் அவசியம்.
*************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |