இன்றைய ராசிபலன்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

செய்திப்பிரிவு

மேஷம்

தொடங்கிய செயலில் உறுதியாக இருந்து முடிப்பீர்கள். கணவன் -மனைவிக்குள் மனம்விட்டு பேசுவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. பணவரவு திருப்தி தரும்.

ரிஷபம்

பேச்சில் கம்பீரம் பிறக்கும். முன்கோபம், வீண் அலைச்சல் நீங்கி நிம்மதி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.

மிதுனம்

குடும்பத்தினரின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகள் உடல்நிலை சீராகும். நீண்டகால பிரார்த்தனைகள் நிறைவேறும். பேச்சில் நிதானம் தேவை.

கடகம்

நீண்ட நாளாக மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். நம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதால் மகிழ்ச்சி கூடும்.

சிம்மம்

காரியங்களை முடிப்பதில் இருந்த தடுமாற்றங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். ஆன்மிக ஈடுபாடு கூடும்.

கன்னி

அதிக வேலைச்சுமை இருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துச் செல்வீர்கள். சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள்.

துலாம்

இழுபறியாக இருந்த காரியங்கள் நல்லபடியாக முடியும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். சிபாரிசு செய்வது, ஜாமீன் கையெழுத்திடுவது வேண்டாம்.

விருச்சிகம்

எப்போதும் பரபரப்புடன் இருப்பீர்கள். வீண் செலவுகளை தவிர்த்து எளிமையாக வாழ விரும்புவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.

தனுசு

கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை உயரும். கையில் பணப் புழக்கம் அதிகரிக்கும்.

மகரம்

புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பால்ய நண்பர்கள் தொடர்புகொண்டு பேசுவார்கள். வெளி வட்டாரத்தில் மதிப்பு கூடும்.

கும்பம்

உணர்ச்சி வேகத்தில் முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்ற போராடவேண்டி இருக்கும். நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

மீனம்

எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல சேதி வந்து சேரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு.

*******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT