இன்றைய ராசிபலன்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

செய்திப்பிரிவு

மேஷம்

அரசு வகையிலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. இழுபறியாக உள்ள பூர்வீக சொத்து பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். எக்காரியத்திலும் நிதானம் தேவை.

ரிஷபம்

மன நிம்மதி, உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள்.

மிதுனம்

புதிய முயற்சிகள் சற்று தள்ளிப்போய் முடியும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துபோகும். எல்லாவற்றிலும் மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட வேண்டாம்.

கடகம்

பிள்ளைகளை அன்பால் அரவணைத்துச் செல்வீர்கள். சிலர் உதவுவதுபோல நெருங்கி வந்து சிக்கலை ஏற்படுத்துவார்கள் என்பதால் கவனம் தேவை.. மறைமுகப் பிரச்சினைகள் வந்து நீங்கும்.

சிம்மம்

பிள்ளைகளால் மரியாதை, அந்தஸ்து உயரும். உங்களை புரிந்துகொள்ளாமல் விலகிச் சென்றவர்கள் தவறை உணர்வார்கள். ஆன்மிகம், யோகா, தியானத்தில் ஈடுபாடு உண்டாகும்.

கன்னி

பழைய உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டு. பழைய கடன் பிரச்சினைகள் தீரும். எதிர்பாராத காரியங்கள் நிறைவேறும். பணவரவு, பொருள் வரவு உண்டாகும்.

துலாம்

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வராது என்று நினைத்த பணம் வந்துசேரும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்து பிரச்சினையில் சாதகமான திருப்பம் ஏற்படும். பொருட்கள் சேரும்.

விருச்சிகம்

எதற்கும் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக செயல்படுங்கள். நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதம் ஏற்படும். உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும்.

தனுசு

சகோதர வகையில் நன்மை உண்டு. செலவுகள் ஒரு பக்கம் அதிகரித்தாலும், அதற்கேற்ற பணவரவும் இருக்கும். உறவினர்கள், நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். பேச்சில் பொறுமை தேவை.

மகரம்

அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கும். பழைய கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

கும்பம்

புது பொறுப்புகளும், வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றியடையும். வீண், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

மீனம்

மறுக்கப்பட்ட சலுகைகள் திரும்பக் கிடைக்கும். கடின உழைப்பு வெற்றி தரும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். மருத்துவச் செலவுகள் படிப்படியாக குறையும். பெரியவர்களின் ஆசி கிடைக்கும்.

****************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT