மேஷம்: பொது காரியங்களில் ஈடுபடுவீர். குழப்பம் நீங்கி முக மலர்ச்சியுடன் காணப்படுவீர். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவர். அலுவலகரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.
ரிஷபம்: இழுபறியாக இருந்து வந்த பணிகள் முடியும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் சாதகமாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவர்.
மிதுனம்: வெகுநாட்களாக மனதளவில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்கள், பணியாட்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடக்கவும்.
கடகம்: குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு பெருகும். மனைவி, பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதார்த்தமான பேச்சால் தடைபட்டபணியை முடிப்பீர். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவிகரமாக நடந்து கொள்வர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
சிம்மம்: திட்டமிட்ட பணிகளை முடிப்பதில் இழுபறி நீடிக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்கள் தொந்தரவு தருவார்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
கன்னி: தடைபட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்கள் தடபுடலாக நடக்கும். பால்ய நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பர். வியாபாரரீதியாக சில முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும். சக ஊழியர்கள், மேலதிகாரிகள் ஆதரவு தருவர்.
துலாம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பணவரவு உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். தம்பதிக்குள் மனம் விட்டு பேசுவது நல்லது. அக்கம் பக்கத்தினரின் உதவியால் சில காரியங்கள் நடந்தேறும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.
விருச்சிகம்: புதுப் புது எண்ணங்கள் மனதில் தோன்றும். குடும்பத்தினரின் ஆதரவு உண்டு. தாயாரின் உடல்நலம் சீராகும். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் திருப்தி தருவதாக அமையும். பங்குதாரர்கள் ஆதரவு தருவர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.
தனுசு: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பணவரவு கூடும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரரீதியாக பிரபலங்களின் அறிமுகம் கிட்டும். மக்கள் அதிகம் கூடும் இடத்துக்கு கடையை மாற்றுவீர். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர்.
மகரம்: தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு வந்து போகும். முன்கோபத்தை தவிர்க்கவும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்த வேண்டாம். எதிலும் அவசர முடிவுகளை தவிர்க்கவும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
கும்பம்: பழைய பிரச்சினைகளை சுமுகமாக பேசித் தீர்ப்பீர். வீட்டில் நிம்மதி பிறக்கும். பிள்ளைகளின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்க்கலாம். அனுபவமிக்க பணியாட்கள் வருவர். அலுவலகத்தில் உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
மீனம்: பால்ய நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். தாய்வழி உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். வியாபாரரீதியாக பிரபலங்களை சந்திக்க வேண்டி வரும். அலுவலகத்தில் மேலதிகாரியை பகைத்துக் கொள்ளாதீர்.