மேஷம்: அடுக்கடுக்காக வந்த செலவுகள் குறையும். சவாலான காரியங்களையும் எளிதாக முடிப்பீர். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். முன்கோபம் தவிர்ப்பீர். வியாபாரரீதியாக பிரபலங்களின் உதவியை நாடுவீர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
ரிஷபம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராக பேசி காரியம் சாதிப்பீர். சேமிக்கும் அளவுக்கு வருவாய் கூடும். பழுதான சாதனங்களை மாற்றிவிட்டு புதிது வாங்குவீர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.
மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்கள். அலுவலகத்தில் மகிழ்ச்சியுண்டு. வியாபார ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டிவரும்.
கடகம்: தாயார், மனைவியின் உடல்நிலை பாதிக்கும். கையிருப்பு கரையக்கூடும். பிள்ளைகள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும். வியாபார போட்டிகள் கூடும். எதிலும் கவனம் தேவை.
சிம்மம்: விருந்தினர் வருகை உண்டு. குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பிள்ளைகள் தங்கள் விளையாட்டுத்தனத்தை மாற்றிக் கொண்டு பொறுப்பாக நடந்து கொள்வர். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
கன்னி: உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வர வாய்ப்பு உண்டு. மூத்த சகோதர, சகோதரிகள் உதவி செய்வர். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கவும். உத்தியோகம் சிறக்கும்.
துலாம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். பழைய நினைவுகளில் மூழ்குவீர். சிலர் நன்றி மறந்து பேசுவர். வியாபாரத்தில் பழைய பாக்கியை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார். சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாமல் செயல்படவும்.
விருச்சிகம்: குழப்பங்கள் நீங்கி மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படு வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்.
தனுசு: வர வேண்டிய பழைய பாக்கிகள் கைக்கு வரும். செலவுகளைக் குறைத்து வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர். புதியவர்கள் அறிமுகமாவர். வழக்குகள் சாதகமாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் குழப்பங்கள் நீங்கி நிம்மதி பிறக்கும்.
மகரம்: பேச்சில் நிதானம் தேவை. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர். பிள்ளைகளால் கையிருப்பு கரையும். உத்தியோகத்தில் ஒரு வேலையை முடிக்க இரண்டு மூன்று முறை முயற்சிக்க வேண்டிவரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய தீவிரமாக உழைப்பீர்.
கும்பம்: எதிர்பார்த்துக் காத்திருந்த பணம் வந்து சேரும். வீட்டில் பழுதான பொருட்களை மாற்றிவிட்டு புதிய பொருட்களால் அலங்கரிப்பீர்கள். வியாபாரரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். உங்கள் தரம் உயரும்.
மீனம்: சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர். தாய்வழி உறவினரால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.
பணியாட்களின் ஆதரவு உண்டு. பங்குதாரர்களை பகைத்து கொள்ள வேண்டாம். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.