இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 06 நவம்பர் 2025

செய்திப்பிரிவு

மேஷம்: பெற்றோரின் பேச்சுக்கு மதிப்பளிக்கவும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாகும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

ரிஷபம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்த ஈகோ பிரச்சினைகள் நீங்கும். வியாபார போட்டிகளை எளிதில் சமாளிப்பீர். பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

மிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வேற்றுமொழி பேசுபவர்களால் நல்லது நடக்கும். அலுவலகரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்புண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விரயச் செலவுகள் குறையும்.

கடகம்: சவாலான விஷயங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பர். திடீர் பயணங்கள் உண்டு. உறவினர்கள், பழைய நண்பர்களை சந்திப்பீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

சிம்மம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு உண்டு. எதிர்ப்பு, ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

கன்னி: குடும்பத்தினருடன் சென்ற பயணங்கள் திருப்தி தரும். நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் செல்லும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.

துலாம்: முன்கோபத்தை தவிர்க்கவும். அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்தவும். எதிலும் கவனம் தேவை. அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிட்டும்.

விருச்சிகம்: பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர். புது ஆடை, ஆபரணங்களில் மனம் லயிக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. சொத்து பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.

தனுசு: இலக்கை நோக்கி முன்னேறுவீர். சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு நாள் குறிப்பீர். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவர். அலுவலகத்தில் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த முயல்வீர்.

மகரம்: குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். தாயாரின் உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டு. வியாபாரரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர். அலுவலகத்தில் உயரதிகாரி நண்பராவார். சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

கும்பம்: புது புது யோசனைகளை தந்து உங்களை சுற்றியிருப்பவர்களை அசத்துவீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி நிறைவடையும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்கும்.

மீனம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சகோதரர்கள், நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிலம், வீடு வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் புகார் கூற வேண்டாம். வியாபாரத்தில் லாபம் உண்டு.

SCROLL FOR NEXT