இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 07 அக்டோபர் 2025

செய்திப்பிரிவு

மேஷம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வாகனத்தை மாற்றுவீர். நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களை சந்திப்பீர். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் நிம்மதி கிட்டும்.

ரிஷபம்: பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். தாயாரின் உடல்நலம் திருப்தி தரும். முன்கோபம் குறையும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும்.

மிதுனம்: வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருகை தருவர். உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.

கடகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் நிலவிய குழப்பம் விலகும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். மேலதிகாரிகள் பாராட்டுவர். கூட்டுத் தொழில் செய்பவர்கள் நல்ல லாபம் பார்க்கலாம்.

சிம்மம்: எதிர்பார்த்து காத்திருந்த பணம் கைக்கு வரும். மூத்த சகோதர வகையில் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் விவாதம் தவிர்க்கவும். புது அதிகாரி உங்களை மதிப்பார்.

கன்னி: எதிர்பார்த்த உதவிகள், வாய்ப்புகள் தடைபடும். குடும்பத்தில் விவாதங்கள் வேண்டாம். வியாபாரத்தில் போட்டி இருக்கும். பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்கவும். அலுவலகரீதியான பயணம் மேற்கொள்வீர்.

துலாம்: மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். உடன் பிறந்தவர்கள் பாசமாக இருப்பர். அலுவலகத்தில் புது பொறுப்புகள் ஏற்பீர். வியாபாரத்தில் ஏற்றமுண்டு.

விருச்சிகம்: முன்கோபத்தை குறைப்பது நல்லது. சுகமான அனுபவங்களை நினைத்து மகிழ்வீர். வியாபாரத்தில் பணியாட்கள் நன்றியுடன் இருப்பர். அலுவலகத்தில் அனைவரையும் அனுசரித்து நடந்துகொள்ளவும்.

தனுசு: சொத்து வழக்கில் வெற்றி பெறுவீர். புதியவர்கள் நண்பர்களாவர். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள். அலுவலகத்தில் சவாலான பணிகளையும் வெற்றியுடன் முடிப்பீர்கள்.

மகரம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

கும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். பணியாட்கள் அன்பாக நடந்து கொள்வார்கள். அலுவலகத்தில் பதவி உயர்வு உண்டு.

மீனம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பாக்கியை போராடி வசூலிப்பீர். உத்தியோகம் சிறக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

SCROLL FOR NEXT