இன்றைய ராசிபலன்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

செய்திப்பிரிவு

மேஷம்: தன்னம்பிக்கை துளிர்விடும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மாலை முதல் உடல்சோர்வு வரக்கூடும். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு.

ரிஷபம்: நினைத்த காரியங்கள் மளமளவென்று நிறைவேறும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். வீண் அலைச்சல், டென்ஷன் விலகும்.

மிதுனம்: உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளால் நிம்மதி ஏற்படும். வீட்டுக்குத் தேவையான மின்சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும்.

கடகம்: பிரச்சினைகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். ஓரளவு பணவரவு உண்டு. பங்கு வர்த்தகம் லாபம் தரும். நீண்டகால பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரவாக இருப்பார்.

சிம்மம்: கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். சொத்துப் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

கன்னி: பயணங்கள் அலைச்சல் தரும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வேலைகளை முடிக்க போராடுவீர்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்படும்.

துலாம்: உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். பிள்ளைகளின் திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவிப்பீர்கள். நீண்டகாலமாக விலகியிருந்த உறவினர்கள் தேடி வருவார்கள்.

விருச்சிகம்: தடைகளை உடைத்து முன்னேறுவீர்கள். சகோதரர் வகையில் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கும். சின்னச்சின்ன உடல்நலக் கோளாறுகள் விலகும். வியாபாரத்தை விரிவுபடுத்த முக்கிய நபர்களை சந்திப்பீர்கள்.

தனுசு: சவாலான காரியங்களையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள்.

மகரம்: மறைமுக எதிரிகளைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். தந்தைவழி உறவினர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். புண்ணிய தலங்களுக்குச் செல்ல திட்டமிடுவீர்கள்.

கும்பம்: உறவினர், நண்பர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள்.

மீனம்: கனிவானப் பேச்சால் காரியங்களை சாதிப்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். மகளுக்கு நல்லவரன் அமையும். வியாபாரத்தில் போட்டிகள் விலகும்.

SCROLL FOR NEXT