இன்றைய ராசிபலன்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

செய்திப்பிரிவு

மேஷம்: நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழல் அறிந்து செயல்படுவர். சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார் என்பதை கண்டறிவீர். வியாபாரம் சிறக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

ரிஷபம்: குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர். வழக்குகளை பேசித் தீர்ப்பீர். பணவரவு திருப்தி தரும். வியாபாரம், உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஏற்றமுண்டு.

மிதுனம்: குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் விலகும். பணவரவு உண்டு. வியாபார நுணுக்கங்கள் சிலவற்றை கற்றுக் கொள்வீர். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

கடகம்: தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர். உடல் உபாதை நீங்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

சிம்மம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். எதிர்பார்த்து காத்திருந்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.

கன்னி: கூடுதலான பணவரவால் வீட்டிலுள்ள பழைய பொருட்களை மாற்றுவீர். அலுவலகத்தில் உயரதிகாரி பாராட்டும்விதமாக நடப்பீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள்.

துலாம்: உங்களால் பயனடைந்தோர் உங்களுக்கு உதவி செய்வர். திட்டமிட்ட வேலையை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

விருச்சிகம்: தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போவீர். குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்தை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் உயர்ந்த இடத்தைப் பிடிப்பீர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆதரவு தருவர்.

தனுசு: நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். வியாபாரத்தில் பிரபலங்களின் நட்பு கிட்டும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மகரம்: குழப்பம் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர். விவாதங்கள் விலகும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு உண்டு. வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும்.

கும்பம்: புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். குலதெய்வ பிரார்த்தனை நிம்மதி தரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.

மீனம்: சகோதர வகையில் செலவு, அலைச்சல் வரும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்தும் முயற்சிகளில் இறங்குவீர்கள்.

SCROLL FOR NEXT