மேஷம்: குடும்பத்தினருடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.
ரிஷபம்: நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். நண்பர்கள் வீடு தேடி வருவர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்கள்.
மிதுனம்: முன்கோபம் வேண்டாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து போகவும்.வியாபாரத்தில் பழைய பாக்கியை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவார். இழுபறியான பணிகளை முடிப்பீர்கள்.
கடகம்: மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களின் செயலை பார்த்து மற்றவர்கள் வியப்பர். குடும்பத்தில் நிம்மதி தங்கும். பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும். அலுவலகத்தில் இடமாற்றம் உண்டு.
சிம்மம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். பிள்ளைகள் பொறுப்பாக இருப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். வியாபாரத்தில் மேலதிகாரிகள் ஆதரிப்பர்.
கன்னி: உடன் பிறந்தவர்களால் ஆதாயமுண்டு. பேச்சில் தெளிவு பிறக்கும். முரண்டு பிடித்த பிள்ளைகள் சொல் பேச்சு கேட்பர். தாயாரின் உடல்நலம் நிம்மதி தரும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
துலாம்: புது முயற்சிகளில் ஈடுபடுவீர். குலதெய்வ பிரார்த்தனைகள் நிம்மதி தரும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவை பெறுவீர்.
விருச்சிகம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். மன உளைச்சல் நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர்கள் உதவி நாடி வருவர். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. வியாபாரம் சிறக்கும்.
தனுசு: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். வாகனத்தில் நிதானம் தேவை. வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
மகரம்: உங்களின் அணுகுமுறையை மாற்றி தடைபட்ட வேலையை முடிப்பீர்கள். சகோதரியின் விசேஷத்துக்கு அதிகம் உழைப்பீர். அலுவலகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயல்வீர்.
கும்பம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர். உறவினர்கள் உங்களை பெருமையாக பார்ப்பார்கள். ஊர் நிகழ்ச்சிகளில் முதன்மை தாங்குவீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.
மீனம்: தெளிவாக பேசி சில வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வங்கிக் கடனை பைசல் செய்வீர். வியாபாரம் லாபம் தரும். குழப்பம் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி கிட்டும்.